Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எதிர்வரும் அரச தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா போட்டியிடுவார் என்று ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு அறிவித்துள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ உட்பட செயற்குழு உறுப்பினர்கள் மூவர் கட்சியின் மேற்படி தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளபோதும் ஐக்கிய தேசிய கட்சியின் ஏனைய செயற்குழு உறுப்பினர்களின் ஆதரவுடன் பொன்சேகாவின் தெரிவு ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

முன்னதாக, ஐக்கிய தேசிய கட்சியினருக்கும் சரத் பொன்சேகாவுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று கொழும்பில் அமைந்துள்ள பொன்சேகாவின் புதிய அரசியல் காரியாலயத்தில் இடம்பெற்றிருந்தது. இதில் இரு தரப்புக்கும் இடையில் பல்வேறு விடயங்களிலும் இணக்கப்பாடுகள் எட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to சரத் பொன்சேகா அரச தலைவர் வேட்பாளர்: ஐ.தே.க. செயற்குழு அறிவிப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com