Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மஹிந்த ராஜபக்ஷவுக்கு வொஷிங்டனிலுள்ள அமெரிக்க சமஷ்டி நீதிமன்றமொன்று அழைப்பாணை பிறப்பித்துள்ளது.

இலங்கையில் மூன்று வெவ்வேறு சம்பவங்களில் கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் தாக்கல் செய்துள்ள வழக்கின் விசாரணைக்காவே அவருக்கு நீதிமன்ற அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. சித்திரவதைகளினால் பாதிக்கப்படுவோரைப் பாதுகாக்கும் அமெரிக்க சட்டத்தின் கீழ் பிரஸ்தாப வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் உயிரிழந்த மாணவர் ரஜிஹரனின் தகப்பனார், மூதூரில் அக்ஷன் பெய்ம் தொண்டு நிறுவனத்தின் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்ட போது கொல்லப்பட்ட பிரேமாஸ் ஆனந்தராஜாவின் ஆகியோரின் உறவினர்களும் மற்றும் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது உயிரிழந்த தவராஜா குடும்பத்தினர் ஆகிய மூன்று தரப்பினர் கூட்டிணைந்து மஹிந்த ராஜபக்ஷவுக்கெதிராக முப்பது மில்லியன் நஷ்டஈடு கோரி மேற்குறித்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளனர்.

இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட நீதிக்குப் புறம்பான மேற்படி படுகொலைகளால் தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர்கள் தங்கள் வழக்கின் பிரதிவாதியாக இலங்கை முப்படைகளின் கட்டளைத் தளபதி என்ற வகையில் மஹிந்த ராஜபக்ஷவை குறிப்பிட்டுள்ளனர்.

இனஅழிப்புக்கு எதிரான தமிழர்கள் அமைப்பின் துணையுடன் கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவின் முன்னாள் சட்டமா அதிபரான புரூஸ் பெயின் ஊடாக குறித்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. சித்திரவதைகளுக்கெதிரான ஹேக் பிரகடனத்தில் அமெரிக்காவும், இலங்கையும் கையெழுத்திட்டுள்ள நிலையில் அதே சட்டத்தின் கீழ் அமெரிக்காவில் எந்தவொரு நாட்டினருக்கும் எதிராக வழக்குத் தாக்கல் செய்ய முடியுமென்ற விதியைப் பயன்படுத்தியே பிரஸ்தாப வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தற்போது வழக்கு விசாரணைகளுக்கு ஆஜராகுமாறு மஹிந்த ராஜபக்ஷவுக்கு அமெரிக்க சமஷ்டி நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது. அதற்கான அழைப்பாணை நீதியமைச்சின் செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தகவலறிந்த வட்டாரங்களிலிருந்து தெரிய வருகின்றது.

0 Responses to போர்க்குற்றவாளி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அமெரிக்க நீதிமன்றம் அழைப்பாணை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com