Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

டக்ளஸ் - யோகேஸ்வரி லடாய் முற்றியது!!

பதிந்தவர்: தம்பியன் 25 December 2013

ஆளும் தரப்பாக ஒட்டிக்கொண்ட பலரும் தற்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிலிருந்து விலகிச்செல்கின்ற நிலையினில் அப்பட்டியலில் புதிதாக யாழ்.மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணமும் இணைந்து கொண்டுள்ளார்.தற்போது சுதந்திரக்கட்சியின் ஹத்துருசிங்க அணியுடன் ஜக்கியம் காட்டிவரும் அவர் அடுத்த மாநகரசபை தேர்தலினில் சுதந்திரக்கட்சி சார்பினிலேயே போட்டியிடவும் திட்டமிட்டுள்ளார்.ஏற்கனவே மோசடி முறைகேடுகளால் முதல்வர் ஈட்டிக்கொண்டுள்ள வருமானங்கள் தொடர்பினில் முழுமையான விபரங்களை அமைச்சர் சேகரித்துக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.



இருவருக்குமிடையேயான பிளவு பகிரங்கமாகவே நேற்று நடைபெற்ற நத்தார் தின நிகழ்வினில் தெரிந்தது. யாழ்.மாநகர சபையால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் திருப்தியளிக்கவில்லையென பகிரங்கமாக தெரிவித்த டக்ளஸ் மக்களுடைய தேவைகளை இனங்கண்டும் கருத்தில் கொண்டும் தொடர்ந்தும் வேலைத்திட்டங்களை நாம் முன்னெடுக்கவுள்ளோம் எனவும் தெரிவித்திருந்தார்.


யாழ்.மாநகர சபையின் வருடாந்த ஒளிவிழாவில் இன்றைய தினம் (24) பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.நிகழ்வினில் தனக்கருகாக முதல்வர் யோகேஸ்வரி அமர்வதை தவிர்த்த அமைச்சர் மேடையிலும் ஏனோ தானோவென அவரை புறந்தள்ளி நடந்து கொண்டார்.

0 Responses to டக்ளஸ் - யோகேஸ்வரி லடாய் முற்றியது!!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com