Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மண்டேலாவின் அஞ்சலி நிகழ்வில் சமிக்ஞை முறை மொழி பெயர்ப்பாளராக பணியாற்றியவர் ஒரு பைத்தியம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உளவியல் பாதிக்கப்பட்ட இவர் தற்போது மனநோய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உலகத் தலைவர்களின் பாதுகாப்புக்கு படைகளை துப்பாக்கிகளுடன் குவித்துவிட்டு, சற்லைற்றுக்கள் காண்காணிக்க அமெரிக்க அதிபர் பேசுகிறார் என்று பெருமைப்பட்டவர்கள் பலர்..

ஆனால் அத்தருணம் அதிபருக்குப் பக்கத்தில் பைத்தியத்தை நிறுத்தி பகல் குருடர்களாக இருந்திருக்கிறார்கள் உலகத்தின் விண்ணாதி விண்ணர்கள் என்பதுதான் இப்போது சிரிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பேச்சுக்கு சமிக்ஞை காட்டிய இவருடைய கைகளுக்கு அருகில்தான் ஒபாமா நின்று கொண்டிருந்தார், இவரை அந்த இடத்தில் நிறுத்தியது மொழி பெயர்ப்புப் பிழையை விட மிகப்பெரிய பாதுகாப்புப் பிழையாகும்.

ஒரு பைத்தியத்தை அமெரிக்க அதிபருக்கு அருகில் சி.ஐ.ஏ அனுமதிக்குமா..? என்று கேள்வி கேட்டால் இந்த விடயத்தில் உள்ள பாராதூரம் தெரியவரும்.

உண்மையில் ஒபாமா எவ்வளவு பெரிய ஆபத்தில் இருந்து தப்பியுள்ளார் என்ற கோணத்தில் இந்த விவகாரம் பார்க்கப்படவில்லை.

உலகத் தலைவர்களின் கைத்தொலைபேசிகளை ஒட்டுக்கேட்கும் அமெரிக்க என்.எஸ்.ஏ சத்தமில்லாமல் சிக்னல் காட்டிய இவரை கோட்டைவிட்டிருப்பது கவனிக்கத்தக்கது.

உலகத் தலைவர்கள் பங்கேற்ற மண்டேலாவின் இறுதி பெரும் அஞ்சலி நிகழ்வு சுவீற்றோ சிற்றி ஸ்ரேடியத்தில் நடந்தபோது ஊமைப்பாஷை பொழி பெயர்ப்பாளராக கடமையாற்றியவர் தமசங்கா ஜனிற்றி என்பவராகும்.

ஒபாமா என்னவோ பேச இவர் என்னவோ சமிக்ஞைகளைக் காட்டிக் கொண்டிருந்தார், இப்போது காரணம் தெரிந்துள்ளது.

இவர் ஒபாமாவின் பேச்சுக்கு சிக்னல் கொடுத்ததைவிட வானத்தில் உள்ள தேவதைகளுக்கு சிக்னல் கொடுத்திருப்பதுதான் பெரிய கதையாகும்.

மேற்கண்ட நபர் கடந்த 10 ம் திகதி டிசம்பர் மாதம் உளவியல் சிகிச்சைக்காக வைத்தியசாலை செல்ல வேண்டியிருந்தாலும் எப்படியோ ஒப்புக்கொண்ட பணியை செய்ய ஸ்ரேடியம் வந்துள்ளார்.

மொழி பெயர்க்கும் போது நட்சத்திர மண்டலங்கள், தேவதைகள் வருவதுபோல காட்சிகள் தெரிந்ததாகவும் கூறியுள்ளார்.

சம்பவம் நடந்த பின் கடந்த சில தினங்களாக அவர் இயலாத நிலையில் இருக்கிறார் என்றும் அன்றைய தினம் அவர் முழுமையாக சுய கட்டுப்பாட்டை இழந்திருந்தார் என்றும் அவருடைய மனைவி சிசீவி தெரிவிக்கிறார்.

தென்னாபிரிக்க மொழி பெயர்ப்பு நிறுவனம் இழைத்த தவறுக்கான இவரிடம் நஷ்டஈட்டைக் கேட்டிருந்த நிலையில் பைத்தியம் என்ற செய்தி அதிரடியாக வெளியாகியுள்ளது.

இவர் உண்மையில் பைத்தியமா அல்லது தகுதி குறைந்தவரா என்பது வெளிவர நாட்களாகும், ஆனால் தற்போதைய அதிபர் ஜாக்கப் சூமா மீது வைக்கப்படும் விமர்சனங்கள் மேலும் கூர்மையடைய இவருடைய கூத்தாட்டம் காரணமாகியுள்ளது.

பிடித்தாலும் பிடித்தார்கள் மண்டை பிழைத்தவரை பிடித்துவந்து மண்டேலாவின் அஞ்சலி நிகழ்வுக்கு நிறுத்தினார்களே.. என்று உலகம் கேலி செய்யும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

பக்கத்தில் பைத்தியம் நிற்க, தாம் பாதுகாப்பாக இருக்கிறோம் என்று இறுமாப்பாக பேசிய உலகத் தலைவர்கள் நகைப்பிற்குள்ளாகும் நிலையும் வரும் நாட்களில் ஏற்பட்டால் ஆச்சரியப்பட முடியாது.

இதற்குள் நின்று ஒபாமவுடனும் கமரோனுடனும் படம் பிடித்த டென்மார்க் பெண் பிரதமரின் புகைப்படத்தையும் சேர்த்தால் செய்தி மேலும் ஜோராக இருக்கும்.

பைத்தியக்கார உலகம் என்று முன்னுள்ளவர்கள் உலகைக் கேலி செய்தது எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது.

சிரிப்பு வருது.. சிரிப்பு வருது..
சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது..

அலைகள்.

0 Responses to மண்டை பிழைத்தவர் மண்டேலாவின் அஞ்சலி நிகழ்வில்...

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com