தமிழ் அரசியல் கைதிகளை எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி யாழ்ப்பாணத்திலும், கொழும்பிலும் இன்று திங்கட்கிழமை போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
சிறையில் வைத்து படுகொலை செய்யப்பட்ட அரசியல் கைதி டெல்ருக்சனின் நான்காவது ஆண்டு நினைவு தினம் இன்றாகும். அந்த நிலையிலேயே, இந்தப் போராட்டங்களை அரசியல் கைதிகளை விடுதலை செய்யவதற்கான தேசிய அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.
யாழ்ப்பாணத்தில் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாகவும், கொழும்பில் வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு முன்பாகவும் இந்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
ஆட்சி மாற்றத்தின் பின்பாக பல தடவைகள் அரசியல் கைதிகள் தமது விடுதலையினை வலியுறுத்தி உண்ணாவிரப் போராட்டத்தினை நடத்தியுள்ளனர். எனினும், அப் போராட்டங்களுக்கு நியாயபூர்வமான தீர்வினை வழங்குவதற்கு அரசாங்கம் மறுத்து வருகின்றது. இவ்வாறானதோர் சூழ்நிலையில் அனைத்து அரசியல் கைதிகளையும் நிபந்தனைகள் இன்றியும் விடுவிக்கக் கோரி, அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான தேசிய அமைப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக அறிவித்துள்ளது.

0 Responses to தமிழ் அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வலியுறுத்தி யாழிலும், கொழும்பிலும் போராட்டம்!