Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சர்ச்சைக்குரிய தென் சீனக் கடற்பரப்பில் கூட்டு இராணுவப் பயிற்சிகளை மேற்கொள்ள ஆசியான் அமைப்பில் அங்கம் வகிக்கும் தென் கிழக்காசிய நாடுகளுக்கு சீனா அழைப்பு விடுத்துள்ளது.

இப்பகுதியில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை குறைப்பதற்காகவே சீனா இத்திட்டத்தை செயற்படுத்த முனைவதாக அரசியல் அவதானிகள் கூறுகின்றனர்.

தென் சீனக் கடற்பரப்பில் ஸ்பார்ட்லி தீவுகள் பகுதியில் சீனா செயற்கைத் தீவுகள், விமான தளங்கள் போன்ற கட்டமைப்புக்களை ஏற்கனவே நிர்வகித்து வருகின்றது. இந்நிலையில் இக்கடற்பரப்பில் அதன் அருகே அமைந்துள்ள நாடுகளான தைவான்,வியட்நாம் மற்றும் மலேசியா போன்ற நாடுகளுக்கும் சீனாவுக்கும் இடையே நீண்ட காலமாக உரிமைப் பிரச்சினை இருந்து வருகின்றது. மேலும் தென் சீனக் கடற்பரப்பில் சீனாவின் ஆதிக்கத்துக்கு சர்வதேசம் கடும் கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றது. மிக அதிகளவில் கணிய வளம் கொண்ட பகுதியாகவும் தென் சீனக் கடல் இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் சமீப காலமாக இக் கடற்பரப்புக்கான சர்வதேச நடைமுறை விதிகளை சீனாவும் தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பான் ஆசியானும் இணைந்து உருவாக்கி வருகின்றன. இதன் விளைவால் ஏற்பட்ட செயற்பாட்டின் விளைவினால் தான் ஆசியான் நாடுகளுடன் கூட்டுச் சேர்ந்து தென் சீனக் கடற்பரப்பில் கூட்டு இராணுவப் பயிற்சியை மேற்கொள்ள சீனா விருப்பம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த கூட்டு கடற்படை பயிற்சியை கணணி சிமுலேசன் மூலம் முதன் முறையாக மேற்கொள்ளவுள்ளன. இதன் மூலம் அவசர கால உதவி, நம்பிக்கை மற்றும் தென்சீனக் கடற்பரப்பின் பதற்றத்தை தணித்தல் போன்ற இலக்குகளை இந்த நாடுகளுக்கு இடையே எட்ட முடியும். ஏற்கனவே வெள்ளிக்கிழமை முடிவடைந்த 40 சீன மாலுமிகளுக்கும் 10 தென் கிழக்காசிய நாடுகளைக் கொண்ட அமைப்பான ASEAN இன் உறுப்பினர்களுக்கும் இடையேயான கூட்டு இராணுவப் பயிற்சி ஒரு கப்பலின் விபத்தை எப்படிக் கையாள்வது என்பது குறித்து அமைந்திருந்தது.

0 Responses to சர்ச்சைக்குரிய தென் சீனக் கடற் பரப்பில் ஆசியான் நாடுகளுடன் கூட்டு இராணுவப் பயிற்சிக்கு சீனா அழைப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com