கிரிபத்கொடையில் ஜே.வி.பியினர் நேற்று அங்குள்ள திருமண மண்டபம் ஒன்றில் ஏற்பாடு செய்திருந்த பொதுக் கூட்டம் இனந்தெரியாத குழுவினால் குழப்பப்பட்டுள்ளது. நேற்றுப் பிற்பகல் 3.30 மணியளவில் அங்கு திடீரென வந்த ஒரு குழுவினர் மண்டபத்தில் இருந்த கண்ணாடிகளை அடித்து நொருக்கினர். அங்கிருந்த கதிரைகள் மற்றும் தளபாடங்களைக் கண்டபடி தாக்கிச்சேதமாக்கினர். அங்கு கட்டப்பட்டிருந்த பதாதைகளைக் கிழித்தும் எரித்தும் நாசம் செய்தனர்.இந்தக் கலாட்டா நடந்து முடிந்த பின்னர் மாலை 5.30 மணியளவில் திட்டமிட்டபடி ஜே.வி.பியினர் தமது கூட்டத்தை ஆரம்பித்தனர். கூட்டம் ஆரம்பித்த கையோடு மேடைக்கு சோடாப் போத்தல்கள் பறந்து வந்தன. அதை அடுத்து கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. ஜே.வி.பி. ஆதரவாளர்கள் அங்கு வந்து நுழைந்த அக்குழுவினருடன் இழுபறிப்பட்டனர். தொடர்ந்து கைகலப்பும் மூண்டது. இந்தச் சம்பவத்தில் ஜே.வி.பி. ஆதரவாளர் மூவர் காயமடைந்தனர் என்று நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.



0 Responses to கிரிபத் கொடையில் ஜே.வி.பியின் கூட்டத்தில் நேற்று கலாட்டா!