Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஈபிடிபியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா பதவிகளில் இருந்து விலகப் போவதாகத் தெரிவித்து ஈபிடிபியினர் யாழ்.குடாநாட்டில் பாரிய கெடுபிடி நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

இன்று டக்ளஸ் தேவானந்தா பதவிகளில் இருந்து விலகப் போவதாகத் தெரிவித்துள்ளதாகவும் இதனை அடுத்து குடாநாட்டில் உள்ள அனைத்து விற்பனை நிலையங்களை மூடும் அதேவேளை அனைத்து போக்குவரத்துக்களையும் இடைநிறுத்துமாறும் ஈபிடிபியினர் வற்புறுத்தி வருகின்றனர்.

இதனைப் பொருட்படுத்தாது பயணித்த இரண்டு பேருந்துகள் அவர்களால் தாக்குதல்களுக்கு உட்படுள்ளன. நீர்வேலி மற்றும் வல்லைவெளிப் பகுதிகளில் இச்சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இதேவேளை விற்பனை நிலையங்களை மூடுமாறு ஈபிடிபியினர் தெரிவித்துச் சென்று சிறிது நேரத்தில் அனைத்துப் பகுதிகளுக்கும் விரையும் படையினர் விற்பனை நிலையங்களை எக்காரணம் கொண்டும் மூட வேண்டாம் என்றும் அவர்களின் கதைகளை கேட்டு மூடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்து வருகின்றனர். வடமராட்சிப் பகுதியில் இரண்டு தரப்பிற்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்.குடாநாட்டின் பல பகுதிகளிலும் இவ்வாறான வன்முறைகள் தலைதூக்கியுள்ளன. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை இலக்குவைத்தே டக்ளஸ் தேவானந்தா தனது பதவி ராஜினாமா முயற்சியினை மேற்கொண்டுள்ளதாகவும், பொதுத்தேர்தலில் மோசடி மூலம் அதிக வாக்குகளைப் பெற்றதன் பின்னர் தமக்கான அனுதாப வாக்கினை தமிழ் மக்கள் வழங்கியதாகக் கூறுவதற்கு அவர் திட்டமிட்டே இந் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அவருக்கு நெருக்கமான ஆலோசகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

0 Responses to டக்ளசின் பதவி விலகல் நாடகம்: அவரது "தொண்டர்கள்” யாழில் கடைகளை மூடுமாறு அட்டகாசம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com