Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பெப்ரவரி 04 -சிங்களத்தின் சுதந்திர தினம் தமிழீழத்தின் துயரநாள் இந்நாளில் புலம்பெயர் தமிழர்கள் நாம் அணிதிரள்வோம். சிறிலங்காவின் 62வது சுதந்திர தினத்தை புறக்கணிப்போம். தமிழினத்தின் மீது மேற்கொண்ட கொடுமையான இன அழிப்பு, கீழ்மையாகவும், மிலேச்சத்தனமாகவும் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட சித்திரவதைகள், போர்க்குற்றங்கள், தொடரும் மனிதவுரிமை மீறல்கள் என்பவற்றிற்க்கு எதிராகவும், குற்றவாளிகளை கூண்டில் நிறுத்தக்கோரியும், ஐரோப்பா வாழ் தமிழீழ மக்கள் ஒன்றிணைந்து நடாத்தும் மாபெரும் தமிழினத்தின் ஒன்று கூடல்.

பிரான்சு நாட்டிலிருந்து ஒன்றுகூடலில் கலந்துகொள்ளவிருக்கும் அனைவரும் பிரான்சு பாரிசில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்களான கௌரி விலாஸ், கபறினா இறைச்சிக்கடை, வசந் சலூன், தமிழாலயம்(ஈழநாடு) போன்றவற்றில் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

இதேபோன்று யேர்மனி, நெதர்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து பேருந்துகள் புறப்படவுள்ளன. அந்தந்த நாடுகளில் உள்ள நகரச் செயற்பாட்டாளர்களைத் தொடர்ப்பு கொண்டு பேருந்துகளில் உங்கள் இருக்கைகளைப் பதிவு செய்யுங்கள்.

மேலதிக தொடர்புகளுக்கு - தமிழர் ஒருங்கிணைப்புக்குழு

தமிழினத்தின் ஒன்றுகூடல் இடம் -
ஐரோப்பிய ஒன்றிய ஆணையகத்தின் அருகாமையில்
(Avenue La Joyeuse Entrée - Brussels - Belgium)

காலம் - 04.02.2010 வியாழக்கிழமை

நேரம் - 14.00 மணி

0 Responses to பெல்ஜியம் நோக்கி புலம்பெயர் தமிழர்கள் நாம் அணிதிரள்வோம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com