Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழர்கள் இருவர் உள்ளிட்ட சரத்பொன்சேகாவின் ஆதரவாளர்கள் 37 பேர் சிறீலங்கா காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறீலங்கா அரசாங்கத்தின் முதன்மையாளர்கள் மீதான படுகொலை முயற்சி குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வரும் சிறப்புக் காவல்துறை பிரிவினரால் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் சரத்பொன்சேகாவின் அலுவலகத்தினை சோதனை செய்த காவல்துறையினர் அங்கிருந்து கிடைத்த ஆவணங்களை பயன்படுத்தி பலசந்தேக நபர்களை கைதுசெய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் சரத்பொன்சேகாவின் அலுவலக சுற்றிவளைப்பு தேடுதலினை தொடர்ந்து விசாரணைகளை சிறீலங்காப்படை காவல்துறையினர், குற்றப் புலனாய்வுப்பிரிவினர், பயங்கரவாத தடுப்பு பிரிவினர் உள்ளிட்ட படைப் புலனாய்வாளர்கள் இணைந்து சோதனை மற்றும் விசாரணை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் இதுவரை சரத்பொன்சேகாவின் செயற்பாட்டாளர்களான மேஜர் ஜெனரல், பிரிகேடியர்கள் உள்ளிட்ட 19 படை அதிகாரிகள் உள்ளிட்ட 23 படையினர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும், இரண்டு தமிழர்கள் உள்ளிட்ட 37 பேர் இதுவரை கைதுசெய்யப்பட்டு விசரணைகள் நடைபெற்றுவருவதாகவும் சிறீலங்காப்படையினர் தெரிவித்துள்ளார்கள்.

0 Responses to தமிழர்கள் இருவர் உள்ளிட்ட பொன்சேகாவின் ஆதரவாளர்கள் 37 பேர் கைது

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com