Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

2010 புதிய வேலைத்திட்டத்தில் பிரான்சு இளையோர் அமைப்பால் நடைமுறைப்படுத்தப்பட இருக்கும், வருங்கால சந்ததியினரான இளையோரின் புதிய சிந்தனைகளும் காலவோட்டத்திற்கு ஏற்ப அமைய வேண்டிய புதிய பாதைகள் பற்றிய கருத்தரங்கு பாரிசின் புறநகர்ப்பகுதியான பொண்டி எனும் இடத்தில் நடைபெற்றது.

திறமை, விவேகம், ஆளுமை, மனப்பாங்கு என்பவற்றினூடாக நாளைய உலகில் தோன்றும் சவால்களுக்கு முகம் கொடுத்து எமது எதிர்காலத்தைக் கட்டி அமைத்தல். இதன் அடிப்படையில் இளையோரை வேறுபாடின்றி உள்வாங்குதல். எமது தேசியம், மொழி, கலாசாரம், பண்பாடு என்பவற்றைக் பாதுகாத்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை அறிந்து அதற்கான ஆய்வு விவாதம் என கலந்துரையாடல் நகர்ந்தது.

மதியம் 12.00 ஆரம்பமான நிகழ்வில் வீரத்தமிழ்மகன் முத்துக்குமாரின் தியாகத்தின் ஒரு வருட நினைவினைவோடு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது அதனைத்தொடர்ந்து தமிழ் இளையோரும், எதிர்காலமும் திட்டமும் எனும் தலைப்புகளின் கீழ் பல்வேறு விடையங்கள் பேசப்பட்டது.

அத்துடன்

1. இலங்கை மழுமையான வரலாறு விவரணத்தொகுப்பாக ஒளிப்பதிவில் அனைவருக்கும் கண்பிக்கப்பட்டன.

2. விடயங்கள் ஆய்வு - நவீன இசையில் தமிழ் இளையோர் நாட்டமும்இ இணைவும் - கலைஞர்களின் கலந்துரையாடல்

3. இளையோர் எண்ணத்தில் தோன்றும் விடயங்கள் பற்றிய கருத்துப்பகிர்வு என்பன இடம்பெற்றது.

அத்தோடு 10.01.2010 அன்று பிரான்ஸ் இளையோர் அமைபினரால் நடாத்தப்பட்ட சுதந்திர தாகம் நிகழ்வில் பங்களிப்பை வழங்கினவர்களிற்கு மதிப்பளிக்கப்பட்டது.

இதில் இளையோர்கள் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்கள். பெரும்பாலன இளையோர்களின் கருத்து தமிழர்கள் எம் இனத்தினோடு மட்டுமின்றி எம்மை இந்த உலகில் தெரியப்படுத்திக்கொள்வதற்கு மற்றைய இனங்களுடன் தொடர்புகள் வேலைத்திட்டங்கள் நட்புறவுகள் பேணுவது போன்றவற்றை வளர்த்துக்கொள்ளவேண்டும் என கலந்து கொண்ட பெரும்பான்மையானோர் தெரிவித்திருந்தனர்.

மாலை 18.00 தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் எனும தாரக மந்திரத்துடன் நிகழ்வு நிறைவடைந்தது.

0 Responses to பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பின் ஒன்றுகூடல்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com