எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஆளும் கட்சியுடனோ அல்லது எதிர்க்கட்சியுடனோ இணைந்து போட்டியிடும் எண்ணம் தனக்கு இல்லை என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடலாம் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளதாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அரச தலைவர் வேட்பாளருமான சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,"ஆளும் கட்சியுடனோ, அல்லது எதிர்கட்சியுடனோ இணைந்து பொதுத்தேர்தலில் போட்டியிடும் எண்ணம் எனக்கு இல்லை.தமிழ் தேசியம் என்ற நிலைப்பாட்டிலேயே நான் இன்னமும் உள்ளேன். தற்போதும் நான் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒரு உறுப்பினர். எனவே தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடுவதற்கான பேச்சுக்களை கட்சித்தலைமையுடன் மேற்கொள்ளவுள்ளேன்.
இதில் இணக்கப்பாடுகள் ஏற்பட்டால் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடுவேன். பொது தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான எனது நிலைப்பட்டை இவ்வாரம் அறிவிப்பேன்" - என்று அவர் கூறினார்.
இதேவேளை, எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்ப சார்பில் போட்டியிடுவதற்கு சிவாஜிலிங்கம் மற்றும் என்.சிறிகாந்தா ஆகியோருக்கு அனுமதி வழங்குவதில்லை என்று கட்சித்தலைமை முடிவெடுத்துள்ளதாக முன்னர் செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.



0 Responses to பொதுத்தேர்தலில் த.கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிட விருப்பமாம்: சிவாஜிலிங்கம் கூறுகிறார்