"தமிழ்மக்களின் தலைவர்களுடன் பேச்சுநடத்தி சிறுபான்மையினரின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு தயாராக உள்ளேன். ஆனால் தன்னாட்சி பற்றி பேசுவதற்கு ஒருபோதும் நான் தயாரில்லை" - என்று சிறிலங்காவின் அரசதலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். சிறிலங்காவின் 62 ஆவது சுதந்திர தின உரையில் பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.சிறிலங்காவின் 62 ஆவது சுதந்திர தின நிகழ்வு இன்று கண்டியில் நடைபெற்றது. அங்கு அவர் மேலும் பேசுகையில் -
இந்த நாட்டில் சிறுபான்மை இனமக்கள் என்று எவரும் இல்லை என்றும் எல்லோரும் இந்நாட்டு மக்கள் என்றும் கூறிய அரசதலைவர், சகலரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு தொடர்பிலான பேச்சுக்களை ஆரம்பிப்பதற்கு தான் தயாராக உள்ளதாக கூறினார்.
இந்த நாட்டின் நலன்களை மதிக்கும் அனைவரும் சிறிலங்கா மாதாவின் பிள்ளைகள் என்று கூறிய அரச தலைவர் மகிந்த, அவ்வாறான சிந்தனையில் உள்ளவர்கள் அனைவரும் சிறிலங்காவில் சம உரிமையை பெற்றுக்கொள்ளக்கூடியவர்கள் என்றும் கூறினார்.



0 Responses to தமிழ்தலைவர்களுடன் பேச்சு நடத்த தயார்: ஆனால் தன்னாட்சி பற்றி பேசக்கூடாது - சுதந்திரதின உரையில் மகிந்த