நாளை நள்ளிரவு இலங்கைப் பாராளுமன்று கலைக்கப் பட்டு வரும் ஏப்ரல் 8 ம் திகதி பொதுத்தேர்தல்களை நடாத்துவதற்கு அரசு திட்டமிட்டிருப்பதாக உயர் அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தற்போதைய பாராளுமன்றின் கடைசி அமர்வுகள் கடந்த வெள்ளி இடம்பெற்றன. தற்போது ரஸ்யாவில் தங்கியிருக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ பாராளுமன்றைக் கலைக்கும் ஆணையை நாளை வெளியிட்டு அதற்கான ஆவணங்களில் கையெழுத்திடக் கூடும் என அறிய வருகிறது.பொதுத்தேர்தல்களுக்கான வேட்பாளர் தாக்கல் பெப்ரவரி 19 – 26 காலப் பகுதியில் இடம்பெறும் எனவும் அந்த அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் இத்தேர்தலில் அரசுடன் இணைந்து செயற்படுவதா இல்லையா என்பதில் ஈபிடிபி மற்றும் பிள்ளையானின் ரிஎம்விபி ஆகிய கட்சிகள் இதுவரை முடிவெதனையும் எடுக்கவில்லை. கடந்த சனிக்கிமை மட்டக்களப்பில் இதுகுறித்து ஆராய்வதற்காக கூடிய ரிம்விபியினரின் உயர்மட்டக் குழுவினர் முடிவெதனையும் எடுத்திருக்கவில்லை. ஆயினும் தனித்துப் போட்டியிடுவதே சிறந்தது என்ற கருத்து கட்சியில் பெரும்பாலான தலைவர்கள் மத்தியில் காணப்பட்டதாக ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்திருந்தது



0 Responses to பாராளுமன்றம் நாளை இரவு கலைக்கப் படலாம்