Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வவுனியா நெள்ளுக்குளம் பிரதேசத்தில் இரும்புக் கம்பியால் தாக்கி மூவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். இச்சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. இதில் காயம் அடைந்த ஒருவர் அனுராதபுரம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

சிங்களக் குடியிருப்புக்களுக்கு அருகில் உள்ள நெள்ளுக்குளம் பகுதியில் இடம்பெற்ற இக்கொலைச் சம்பவத்தினை தொடர்ந்து அப்பிரதேச மக்கள் அச்சம் அடைந்துள்ளார்கள்.

இதேவேளை வவுனியா புளியங்குளம் பகுதியில் பெண் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடக்க பாணப்பட்டார்.

09 வீதி புளியங்குளம் பகுதியினை சேர்ந்த 30 அகவையுடைய பாலச்சந்திரன் தங்கதேவி என்பவரே மர்மமான முறையில் இறந்துள்ளார்.

சிறீலங்காப்படையினரின் கட்டுப்பாட்டு பகுதிகளில் தமிழ்மக்களின் மர்மக் கொலைகள் அண்மைய காலங்களில் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to வவுனியாவில் தமிழ்ப்பெண் உட்பட நால்வர் படுகொலை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com