இலங்கையின் சக்தி ரிவி ஊடகவியலாளர் சிறிரங்கா மீதும் அவருக்குப் பாதுகாப்பு வழங்கிய துணைக் காவல்த்துறை அதிகாரி மீதும் இன்று கட்டனில் இனந்தெரியாதோரால் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது என காவல்துறைப் பேச்சாளர் SSP IM கருணாரட்ன தெரிவித்துள்ளார். இச் சம்பவத்தில் ஊடகவியலாளர் ரங்கா காயங்களெதுவுமற்றுத் தப்பியுள்ள போதும் துணைக் காவல்துறை அதிகாரி கடுங்காயங்களுக்கு உள்ளாகியிருக்கின்றார். அவர்கள் பயணம் செய்த வாகனமும் கடும் சேதத்திற்கு உள்ளாகியிருக்கிறது. இச் சம்பவம் தொடர்பான முறைப்பாடொன்றினை காவல்துறையினர் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.ஊடகவியலாளர் ரங்கா மின்னல் என்னும் நிகழ்ச்சி ஊடாக பரவலாக அறியப்பட்டிருந்தார்.



0 Responses to சக்தி ஊடகவியலாளர் மீது தாக்குதல்