Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மாணவப் பருவம் மறப்பதற்குரிய பருவமன்று. நினைவிலும் கனவிலும் பள்ளி வாழ்க்கையைப் புரட்டிப் பார்க்கப்படுவது சாதாரண விடயம் தான்.நான் இந்த நாட்டின் ஜனாதிபதியானால்என்று கற்பனையில் கட்டுரை எழுதிய பழக்கதோஷம் போலும். நேற்றிரவு ஆழ்ந்த உறக்கத்தில் ஓர் கடுமையான கனவு. பள்ளி ஒன்றில் மாணவனாக பாடம் படித்துக் கொண்டிருக்கின்றேன்.

தமிழ் ஆசிரியர் கடுப்பேறியவராக வகுப்புக்குள் நுழைகிறார். மாணவர்கள் அமைதி கொள்கின்றனர். மாணவர்களின் அமைதியை கலைக்கும் வகையில் கட்டுரைத் தலைப்பொன்றை ஆசிரியர் தந்தார். நீங்கள் யாழ்ப்பாணத்தில் பொலிஸ் அத்தியட்ச கரானால்என்பதுதான் கட்டுரைத் தலைப்பு. கட்டுரை எழுதுவது என்றாலே சினம் கொள்ளும் நான், ஆசிரியர் தந்த தலைப்பின் காரணமாக உசார் அடைந்தேன். எழுதுதாள்களை எடுத்து வரையத் தொடங்கினேன்.

பொலிஸ் அலுவலகம் உசார் நிலையில் இருக்கின்றது. தொலைபேசி அழைப்புகள் தொடர்ந்தன. யாரங்கே! பொலிஸ் இன்ஸ்பெக்டர் அலுவலகத்திற்குள் ஓடிவருகிறார். யாழ். குடாநாட்டில் ஏன் இந்தப் பயங்கரம்? இன்ஸ்பெக்டர் முழிக்கின்றார். ஓய்கடத்தல், கற்பழிப்பு, கொலை, கொள்ளை, கிணற்றில் சடலம் என்ன காணும் செய்கிறீர். எனது அதட்டல் குண்டு விழுந்தது போல அலுவலகக் கண்ணாடிகளை அதிரவைக்கின்றது.

சேர், நாங்கள் எங்கட தென்பகுதி மக்களின்ர பாதுகாப்பில் மிகவும் கவனமாக இருக்கிறம். நல்லூர் கோவில் வாசலில் பொலிஸ் பாதுகாப்பு, வெளிவீதியில் படையினரின் கட்டுப்பாடு,அதுபோல எங்கட சனங்கள் எங்கெங்க தங்கியிருக்கினமோ அங்கெல்லாம் பொலிஸாரும் இராணுவத்தினரும் உசார் நிலையில் இருக்கின்றனர்.இதைவிடஇன்ஸ்பெக்டர் முணுமுணுக்க, என் மேசையில் இருந்த கோப்பு இன்ஸ்பெக்டரின் முகத்தில் பட்டு கீழே விழுந்தது.

திடுக்கிட்ட இன்ஸ்பெக்டர் தன்னை சுதாகரித்துக் கொண்டு, சேர் எங்கட ஆட்களை பாதுகாக்கிறது தானே எங்கட வேலை. தமிழர் கிணற்றில சடலமாக மிதந்தால் என்ன, கிடங்கில சமாதியாகினால் என்ன, எங்கட சனங்கள் நடுச்சாமத்திலும் பயமில்லாமல் வீதியில் சமைத்துச் சாப்பிடுகினம். பைலாப்போட்டு மகிழ்வாக இருக்கினம். இதற் காகத்தானே எங்களை நியமித்தவர்கள்இன்ஸ்பெக்டர் பச்சையாகச் சொல்ல,எனக்கு கோபம் உச்சமேற, இருந்த சுழல்கதிரை சுவரினில் மோத, எங்கேநான் போட்ட சத்தத்தில் கிளாக் ஓடிவர பொறுப்பற்ற பொலிஸாரின் பெயர்களுக்கு நேரே இடமாற்றம்.

சந்தேகத்திற்கு இடமான வாகனங்களை சோதனையிடுமாறு குடாநாட்டு படைத்தளபதிக்கு கடிதம்.யாழ்ப்பாணத்தில் கடத்தல் அதிகரித்துள்ளதால் அதனைக் கட்டுப்படுத்தும் வரை தென்பகுதி மக்களின் யாழ்ப்பாண வருகையை தடுத்து நிறுத்துமாறு பாதுகாப்பு செயலருக்கு தொலைநகல்.பொலிஸாரின் இரவு நேர ரோந்துக்கு உத்தரவு. யாழ். மாவட்ட நீதிபதிகளைச் சந்தித்து சட்டம் சீர் குலைந்துள்ளதைச் சுட்டிக் காட்டுதல், யாழ். அரச அதிபர் தலைமையில் அவசர மாநாடு.

சந்தியில் நின்று சேட்டை புரிவோர் கைது. சாராயக் கடைகளுக்கு எச்சரிக்கை. இப்படியே அதிரடி நடவடிக்கை. மறுநாள் பத்திரிகைகளில் கடத்தல் முறியடிப்பு, கொலை, கொள்ளை முற்றாக ஒழிப்பு என்ற செய்திகள்.கூடவே பொலிஸ் அத்தியட்சகர் வாழ்கவாழ்கஎன்ற பொதுமக்களின் கோசம்.அந்தக் கோசத்தில் என் நித்திரை முறிய, கண்டதெல்லாம் கனவு. இது நினைவாகாதோ என்ற ஏக்கத்தில் மீண்டும் நாம்.

வலம்புரி.

0 Responses to நான் யாழ்ப்பாணத்தின் பொலிஸ் அத்தியட்சகரானால்...

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com