இலங்கையில் இந்திய திரைப்பட விழாவை நடத்தக்கூடாது என்று நடிர் அமிதாப் பச்சனுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் அவசர தந்தி அனுப்பியுள்ளது. இலங்கை தலைநகர் கொழும்பில் வரும் ஜுன் மாதம் சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழா நடைபெறுகிறது. இந்த விழாவிற்கு பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் விளம்பர தூதராக இருக்கிறார்.இதற்கு ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் போன்ற தமிழக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். மேலும் இயக்குநர் சீமானின் நாம் தமிழர் இயக்கத்தினர் அமிதாப் பச்சன் வீட்டு முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆயிரக்கணக்கான தமிழர்களின் மரணத்துக்கு காரணமான ராஜபக்ச அரசாங்கம் தலைநகர் கொழும்பில் நடத்தும் சர்வதேச திரைப்பட விழாவில் தமிழ் திரைப்படத் துறையைச் சேர்ந்த எவரும் கலந்துகொள்ளக் கூடாது. அதோடு அமிதாப்பச்சன் தனது நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்று அவர்கள் கூறி இருக்கின்றனர்.
மேலும் அமிதாப் அழைப்பை தமிழக முன்னணி நட்சத்திரங்கள் அனைவரும் புறக்கணித்துவிட்டனர்.
இந்நிலையில் இலங்கையில் இந்திய திரைப்பட விழாவை நடத்தக்கூடாது என்று நடிர் அமிதாப் பச்சனுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் அவசர தந்தி அனுப்பியுள்ளது.
அதில் தமிழ் மக்களின் உணர்வுகளை மதித்து திரைப்பட விழாவை கைவிட வேண்டும் என்றும், திரைப்பட விழாவை இலங்கையில் நடத்துவது எங்களுக்கு அதிர்ச்சி தருகிறது என்றும் தென்னிந்திய நடிகர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.



0 Responses to இலங்கையில் இந்திய திரைப்பட விழாவை நடத்தக் கூடாது: தென்னிந்திய நடிகர் சங்கம்