Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யாழ்ப்பாணம் நாவலியில் கடத்தல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று பேருக்கு எதிராகவும் பயங்கரவாத தடுப்பு சட்டம் மற்றும் அவசர கால சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படவுள்ளது.
நாவலியில் இரண்டு குடும்பஸ்தினர்களை கடத்தி கப்பம் பெற முயற்சித்தமை தொடர்பில் மூன்று பேர் அண்மையில் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் மூன்று பேரும் இலங்கை இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது அவர்கள் மீது கடந்த காலத்தில் அவர்கள் செய்த கடத்தல் கொலை மற்றம் பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதற்கான ஆதாரங்களை திரட்டி வருவதாக யாழ்ப்பாண காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் கடத்தல் மற்றம் கப்பம் கோரல் தொடர்பில் வவுனியாவில் கைது செய்யப்பட்ட பெண் தொடர்ந்து இரண்டு மாதங்களாக தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவர் தொடர்பிலான விசாரணைகள் எவையும் இதுவரையில் மேற்கொள்ளப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 Responses to யாழில் இலங்கை இராணுவ புலனாய்வுபிரிவின் அட்டகாசம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com