Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யாழ் மாவட்டத்தில் கடத்தல்கள் இடம்பெறுவதாக வெளிவரும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என இராணுவத்தின் யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துறுசிங்க தெரிவித்துள்ளார்.

எனினும் இவ்வாறான கடத்தல்கள் இடம்பெற்றால் அது குறித்து தமக்கு அறிவிக்கும் பட்சத்தில் அது குறித்து நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் கடந்த சில தினங்களாக கடத்தல் சம்பவங்கள் இடம்பெற்று வருவதும் இது குறித்து பொலாசாரல் சிலர் கைது செய்யப்பட்டும் உள்ள நிலையில் இராணுவத் தளபதியின் இந்தக் கருத்து பெரும் ஆச்சரியத்தையும் விசனத்தையும் ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 2 நாட்களில் மட்டும் சங்கானை, மூளாய், அராலி, ஓட்டுமடம் ஆகிய பகுதிகளில் நான்கு பேர் கடத்தப்பட்டு உள்ளனர்.

0 Responses to யாழ் மாவட்டத்தில் கடத்தல் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com