வவுனியாவில் உள்ள ஈபிடிபி காரியாலயங்கள் பொலிசாரால் சீல்வைக்கப்பட்டுள்ளதுடன், வவுனியா மாவட்ட அமைப்பாளரும் கைது செய்யப்பட்டுள்ளார்.கடந்தவாரம் வன்னி இளம் குடும்பஸ்தர் ஒருவரை வவுனியா மருத்துவமனைக்குச் செல்லும் வளியில் வைத்து கடத்தி கப்பம் கேட்டமை தொடர்பில் ஈபிடிபி காரியாலயத்தில் வைத்து கடத்தல்காரரான ஈபிடிபியின் ரகு என்பவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
இவரிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையினை அடுத்து வவுனியா மாவட்ட அமைப்பாளரான ரகு என்பவர் பொலிசாரால் தேடப்பட்டு வந்துள்ளார்.
குறித்த நபர் வவுனியாவில் இருந்து தப்பி கொழும்பு சென்றிருந்தாகவும், நேற்று முன்னாள் இரவு கொழும்பில் கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவை அவரது அலுவலகத்தில் சந்தித்துவிட்டு வெளியேறியபோது பொலிசாரால் கைது செய்யப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை இன்று வவுனியாவின் குட்செட் வீதி, குருமன்காடு ஆகிய பகுதிகளில் அமைந்திருந்த ஈபிடிபியின் பிரதான அலுவலகங்கள் பொலிசாரால் சீல்வைக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனை அடுத்து ஈபிடிபியின் உயர் மட்டத்தில் கடும் அதிர்ப்தி நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேற்குறித்த விபரங்கள் தொடர்பிலான மேலதிக உறுதிப்படுத்தப்பட்ட செய்திகள் விரைவில் புலர்வில் வெளிவரும்.



0 Responses to ஈ.பி.டி.பி வவுனியா மாவட்ட அமைப்பாளர் கைது