அண்மையில் எழுதிய கட்டுரையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
வன்னியில் நடைபெற்ற போரின் போது தமிழ் மக்களை காப்பாற்றுவதற்கு ஐக்கிய நாடுகள் சபை தலையீடுகளை மேற்கொண்டிருக்க வேண்டும். அரசியல் மற்றும் இரஜதந்திர வழிகளில் அதற்கான வழிகள் அப்போது இருந்தன. ஆனால் ஐ.நா செயல்திறனற்றதாகவே இருந்துள்ளது.
பிரித்தானியாவின் வெளிவிவகாரக் கொள்கைகள் ஏன் மாற்றமடையவில்லை? ஐக்கிய நாடுகள் சபை பொதுமக்களை பாதுகாப்பதில் தவறிழைத்துள்ளது. 2005 ஆம் ஆண்டுக்கு பின்னர் அது செயலிழந்து விட்டது.தமிழ் மக்களை காப்பாற்றும் பொருட்டு சிறிலங்காவில் தலையீடுகளை மேற்கொள்ளும் சந்தர்ப்பம் ஒன்று ஐக்கிய நாடுகள் சபைக்கு கிடைத்தது. ஆனால் அவர்கள் அதனை தவறவிட்டுவிட்டனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தோல்வியடைந்த நாடுகள், பெருமளவில் மனித உரிமை மீறல்கள் மற்றும்
வன்முறைகளை கொண்ட நாடுகள், இனஅழிப்பை மேற்கொள்ளும் நாடுகள் விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபை குறிப்பிட்ட இன மக்களை காப்பாற்றும் பொருட்டு நடவடிக்கை எடுக்க முடியும். அதற்கான சட்டங்கள் உண்டு.ஹொங் ஹொங் நாட்டை பிரித்தானியா ஆட்சிபுரிந்த போது அதன் ஆளுணராக கிறிஸ் பற்றேன் முன்னர் பணியாற்றியிருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.



0 Responses to சிறீலங்கா மீதான தலையீட்டை ஐ.நா தவறவிட்டுள்ளது