Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கொலைகளை மேற்கொண்டவர்கள் இன்று சிம்மாசனத்தில் இருக்கின்றார்கள் என்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற தனது கன்னி உரையின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்திய விஜயகலா, எனது கணவரான தியாகராஜா மகேஸ்வரன் படுகொலை செய்யப்பட்டு இருபத்தெட்டு மாதங்கள் கடந்த நிலையிலும் இதுவரையில் எந்தவித நடவடிக்கையும் குற்றவாளிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படவில்லை.

குற்றவாளிகள் யார் என்பதை இனங்காட்டியபோதிலும் இந்த அரசாங்கம் அவர்களுக்கு எதிராக எந்தவித நடவடிக்கையினையும் எடுக்கவில்லை.

கொலைகளை மேற்கொண்டவர்கள் இன்று சிம்மாசனத்தில் இருக்கின்றார்கள் என்று கண்ணீர் மல்லகத் தெரிவித்துள்ளார்.

அவரது உரை இடம்பெறும் போது சபையின் உதவித் தலைவரான ஈபிடிபியின் சந்திரகுமார் சபாநாயகரின் ஆசனத்தில் இருந்து நிகழ்வினைத் தலைமை தாங்கி நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to கொலைகளை மேற்கொண்டவர்கள் இன்று சிம்மாசனத்தில்: விஜயகலா மகேஸ்வரன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com