கொடிய இனஅழிப்பு யுத்தத்தின் கோரப்பசிக்கு பெற்றோரைப் பலிகொடுத்து, அநாதரவாக நிற்கும் ஈழத்தமிழ் சிறார்களுக்காகக் குரல்கொடுத்திருப்பதுடன், அவர்களின் எதிர்காலம் குறித்த கேள்வியையும் உறுதியாக எழுப்பியுள்ளமை கண்டு அவுஸ்திரேலிய புதிய பிரதமர் யூலியா கில்லார்ட் அவர்களுக்கு சர்வதேசத் தமிழர்கள் தங்களின் மனமார்ந்த நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.முட்கம்பி வேலிகளுக்குப் பின்னால் முடக்கப்பட்டு அகதிகள் என்ற பேரில் சிறைக்கைதிகளாகவும், அடிமைகளை விடவும் மோசமான நிலையில் வாழ்வியல் ஆதாரங்கள் அனைத்தும் மறுக்கப் பட்ட நிலையில் கொடிய இனஅழிப்பு யுத்தத்தின் கோரப்பசிக்கு பெற்றோரைப் பலிகொடுத்து, அநாதரவாக நிற்கும் ஈழத்தமிழ் சிறார்களுக்காகக் குரல்கொடுத்திருப்பதுடன், அவர்களின் எதிர்காலம் குறித்த கேள்வியையும் உறுதியாக எழுப்பியுள்ளமை கண்டு சர்வதேசத் தமிழர்கள் தங்களின் மனமார்ந்த நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்வடைகினர்.
தங்கள் வாழ்வியல் ஆதாரங்கள் அனைத்தையும் சிங்கள பாசிச அரசிடம் சிறிது சிறிதாகப் பறிகொடுத்துக் கடந்த வருடத்தில் இலட்சக்கணக்கான உறவுகளை ஒரேயடியாகப் பறிகொடுத்து, எங்கே முற்றிலுமாக அழிந்துவிடுவோமா என்று அச்சமான நிலையில் வாழ்வின் அவல நிலையில் தத்தளித்துக்கொண்டிருக்கும் ஈழத்தமிழ் மக்களுக்கு ஓர் நம்பிக்கை நட்சத்திரமாகத் தாங்கள் தெரிவதைக் காணக்கூடியதாக உள்ளது.
உலகநாடுளின் வல்லாதிக்க சக்தியின் முன்னிலையில் அவர்களின் பிராந்திய, பொருளாதார நலன் கருதிய சர்வதேசச் சந்தையில் ஈழத் தமிழினத்தின் சுதந்திரமும், வாழ்வாதாரமும் விலைகூறி விற்கப்பட்டும், நசுக்கி அடக்கி ஒடுக்கப்பட்டும், அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில் தர்மத்தின் குரலாக ஓங்கி ஒலித்திருக்கும் மாண்புமிகு யூலியா கில்லார்ட் அம்மையார் அவர்களின் எதிர்கால செயற்பாடுகளும், முற்போக்கான சிந்தனைகளும் செவ்வனே வெற்றீகரமாக செயற்பட எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
எல்லையற்ற தமிழர்
தலைமையகம் - பிரான்ஸ்



0 Responses to அவுஸ்திரேலிய புதிய பிரதமர் அவர்களுக்கு எங்கள் இதயபூர்வமான நன்றி கலந்த வாழ்த்துக்கள்!