Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தஞ்சையில், ஈழப்போர் தொடர்பான, ஓவியர் புகழேந்தியின் ஒவியங்கள்போர் முகங்கள்' என்ற தலைப்பில் காட்சிக்கு வைக்கப்படுகின்றன. வரும் 23.07.2010 அன்று தொடங்கும் இவ்வோவியக் காட்சி, 25.07.2010 வரை நடக்கிறது.

தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள இராமநாதன் மன்றத்தில் நடைபெறும் இக்கண்காட்சியின் தொடக்க நிகழ்வு, 23.07.2010 வௌளிக்கிழமை மாலை 5.30 மணியளவில் நடக்கிறது.

நிகழ்விற்கு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன் தலைமை தாங்குகிறார். திரு. விடுதலைவேந்தன் வரவேற்புரையாற்றுகிறார். தஞ்சை .இராமமூர்த்தி, திரு. தங்க தமிழ்வேலன், தமிழ்க் கலை இலக்கியப் பேரவைச் செயலாளர் புலவர் கோ.நாகேந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.

திரு. .விடுதலைச்சுடர் நன்றியுரையாற்றுகிறார். 24.07.2010 அன்று மாலை நடைபெறும், இரண்டாம் நாள் நிகழ்விற்கு தமிழர் தேசிய இயக்கத்தின் மாவட்டச் செயலாளர் அயனாவரம் சி.முருகேசன் தலைமை தாங்குகிறார். இளந்தமிழர் இயக்கத்தின் செயற்குழு உறுப்பினர் தோழர் .செந்தமிழன் வரவேற்புரையாற்றுகிறார்.

திரு.இரா.ஞானம், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் பழ.இராசேந்திரன், நாம் தமிழர் இயக்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. மணி.செந்தில் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர். .தி.மு.. துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா சிறப்புரை நிகழ்த்துகிறார்.

திரு. துரை.மதிவாணன் நன்றியுரையாற்றுகிறார். 25.07.2010 அன்று மாலை நடைபெறும் நிறைவு விழாவிற்கு .தி.மு.. தஞ்சை மாவட்டச் செயலாளர் திரு. துரை.பாலகிருட்டிணன் தலைமை தாங்குகிறார். தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் நா.வைகறை வரவேற்புரையாற்றுகிறார்.

தமிழ்ப் பல்கலைக்கழக நாடகத்துறைப் பேராசிரியர் மு.இராமசாமி, நாம் தமிழர் இயக்கத்தின் தஞ்சை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. .நல்லதுரை, பெரியார் தொண்டா; திரு. பசு.கவுதமன் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர். இந்தியக் கம்யு+னிஸ்ட் கட்சி மாநில துணைச் செயலாளர் தோழர் சி.மகேந்திரன் சிறப்புரை நிகழ்த்துகிறார்.

ஓவியர் .புகழேந்தி ஏற்புரை நிகழ்த்துகிறார். திரு. மா.இராமதாசு நன்றி நவில்கிறார். ஓவியக் காட்சி நடைபெறும் மூன்று நாட்களிலும் அரங்கு, காலை 10 மணி முதல் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை, போர் முகங்கள் ஓவியக் காட்சி அமைப்புக் குழு செய்து வருகின்றது.

0 Responses to தஞ்சையில் ஓவியர் புகழேந்தியின் ‘போர் முகங்கள்’ ஓவியக் காட்சி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com