தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முக்கிய பிரமுகரான கே.பி. எதிர்வரும் வட மாகாண சபைத் தேர்தலில் அரசின் முதலமைச்சர் வேட்பாளராகக்களம் இறக்கப்படமாட்டார் என்று அரசு தரப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி இலங்கையில் இருந்து வெளியாகும் "த ஐலண்ட்" பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.பெயர் குறிப்பிட விரும்பாத அரச சிரேஷ்ட உயரதிகாரி ஒருவர் இந்தத் தகவலை அப்பத்திரிகைக்கு வழங்கி இருந்தார் என்றும் அரசின் முதலமைச்சர் வேட்பாளர் கே.பி. தான் என்று எதிர்க்கட்சிகள் மேற்கொண்டு வரும் பிரசாரங்களில் உண்மை எதுவும் கிடையாது என்றும் அந்த உயரதிகாரி தெரிவித்திருந்தார் என்றும் அச் செய்தி தொடர்கின்றது.
கே.பியுடன் அரச தரப்பினர் அரசியல் சம்பந்தமாக எதுவுமே பேசியிருக்கவில்லை என்றும் யுத்தத்திற்குப் பிந்திய இலங்கையில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துதல், வடக்குக் கிழக்கு மாகாணங்களை அபிவிருத்தி செய்தல், நாட்டில் யுத்தத்தால் இடம்பெயர்ந்த அகதிகளை மீள்குடியேற்றம் செய்தல் போன்றன சம்பந்தமாகவே பேசியிருந்தனர் என்றும் அந்த உயரதிகாரி குறிப்பிட்டிருக்கின்றார்.
கே.பி. விவகாரத்தை குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக எதிர்க்கட்சியினர் பயன்படுத்துகின்றனர் என்றும் முன்னாள் புலி உறுப்பினர்களிடம் இருந்து பெறக் கூடிய உதவிகளை முட்டாள்கள் மாத்திரமே பெற்றுக் கொள்ளத் தவறுவார்கள் என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டிருக்கின்றார்.



0 Responses to வட மாகாண முதலமைச்சராக கே.பி. போட்டியிடமாட்டார்: சிறிலங்கா அரசு