இனப்பிரச்சினைக்குத் தீர்வுகண்டு யுத்தத்தை முடிபுக்கு கொண்டுவர வேண்டும் என்ற புராணம் முற்றுப்பெற்றுவிட்டது. இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு முன்பதாக, யுத்தம் யுத்தத்தால் முடிக்கப்பட்டது. யுத்தத்தை சமாதானத்தால் முடிபுக்கு கொண்டுவர வேண்டும் என்ற கருத்து இப்போது இலங்கை அரசிடமோ அன்றி சிங்கள மக்களிடமோ இருப்பதாகத் தெரியவில்லை.மாறாக இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது உடனடியாக ஆக்கக் கூடியதல்ல என்று கூறுமளவிற்கு தமிழ் மக்களின் பிரச்சினை சிறுமைப்படுத்தப்படுகின்றது.யுத்தம் முடிந்துவிட்ட கையோடு இனப்பிரச் சினைக்கு தீர்வு காணப்படும் என்று கூறிய அரசியல் தலைவர்களே அதனை பிரட்டிப் பேசுவது எந்தளவு நியாயமானது என்று கேட்கும் திராணி தமிழ் மக்களிடம் தற்போது இல்லை.
தமிழ்மக்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு எல்லாம் இழந்து போயுள்ளனர்.அகிம்சைப் போராட்டம், அதனைத் தொடர்ந்து ஆயுதப்போராட்டம் இந்த இரண்டு போராட்டங் களும் தமிழினத்துக்கு வெற்றியைத் தரவில்லை. இந்த இரண்டு போராட்டங்களும் தமிழ் மக்களுக்கு வெற்றியைத் தரவில்லை என்பதற்காக தமிழ் மக்களின் உரிமைகளைக் கொடுக் காமல் இருப்பதை வெற்றி என அரசு நினைக்கு மாயின் அது மகா தவறாகும்.
தமிழ் மக்களுக்கான உரிமைகள் தொடர்பில் அரசின் மந்தமானபோக்கு இன்று வெற்றியாக இருக்கலாம். அல்லது நாங்கள் நினைத்தால் மட்டுமே தமிழ்மக்களுக்கான உரிமை பற்றியும் எந்தளவு அதிகாரங்களை வழங்குவது என்றும் முடிபெடுக்க முடியும்.கொடுக்கும்போது அவர்கள் வேண்டவேண்டி யது தான் என்ற நினைப்பு சமகாலத்திற்கு பொருத்துடையதாக அமையலாம். ஆனால் எதிர்காலம் பற்றி சிந்திக்கும் எவரும் மேற் போந்த நினைப்பை நியாயமானதாக ஏற்றுக் கொள்ள மறுப்பர்.
எதுவாயினும், இலங்கை அரசின் சமகாலப் போக்கு குறித்து சர்வதேச நாடுகளும், ஐ.நா. சபையும் தெளிந்தும் புரிந்தும் கொண்டுள்ள நிலையில் அரசு தொடர்ந்தும் விதண்டாவாதம் பேசுவது ஆரோக்கியமானதல்ல.



0 Responses to உரிமையைக் கொடுக்காமல் விடுவதை வெற்றியாகக் கருதக் கூடாது: வலம்புரி