ஐக்கிய நாடுகள் சபை உட்பட மேற்குலகிற்கு எதிராக உள்நாட்டில் வீராவேசம் பேசும் வீரவன்ச போன்ற அமைச்சர்கள், வெளிநாடு சென்றதும் அங்கு வெள்ளைக்காரருடன் நின்று படம் பிடிப்பதிலும், பிச்சையெடுப்பதிலும் ஈடுபட்டு வருகின்றனர் என, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான லக்ஸ்மன் கிரியெல்ல கண்டனம் தெரிவித்துள்ளார்.அண்மையில் ஐக்கிய நாடுகள் சபையுடன் ஏற்பட்ட முரண்பாட்டை வெளிநாட்டமைச்சர் ஜி.எல்.பீரிஸ் உரிய முறையில் கையாளத் தவறியிருப்பதாகக் குற்றம் சாட்டிய அவர், இலங்கையை சிறீலங்கா அரசாங்கம் அழிவுப் பாதைக்கு இட்டுச்செல்வதாகவும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சிறீலங்கா அரசு உள்நாட்டில் ஒருவாறு பேசி வருவதுடன், வெளிநாட்டில் மற்றொரு தொனியில் பேசுவதாகவும், இரண்டைக் கொள்கையைக் கடைப்பிடிப்பதாகவம் கிரியெல்ல மேலும் குற்றம் சாட்டினார்.



0 Responses to உள்நாட்டில் ஆவேசம், வெளிநாட்டில் பிச்சையெடுப்பு