Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

.நா. சபையின் கொழும்பு அலுவலகம் ஆர்ப்பாட்டக் காரர்களால் முற்றுகையிடப்பட்ட சம்பவம் தொடர்பாக அராசங்கம் பதலளிப்பது குறித்து சபையில் மெளம் காத்துள்ளது.

.நா. அலுவலகம் முற்றுகையிட்டது தொடர்பில் ரணில் விக்கிரமசிங்க பதிலளிக்குமாறு எழுப்பிய கேள்விக்கே ஆளும் தரப்பைச் சேர்ந்த எவரும் பதிலளிக்கவில்லை.

நேற்று காலை 9.30 மணிக்கு சபாநாயகர் தலைமையில் சபை கூடியது. சபையின் பிரதான நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர் கேள்வியொன்றை எழுப்பியே மேற்கண்டவாறு கேள்வி எழுப்பினார்.

.நாவின் கொழும்பு அலுவலகம் மீது செவ்வாய்க்கிழமை தாக்குதல் நடத்தி சேதம் விளைவித்தமை தொடர்பில் அரசாங்கம் சார்பில் பிரதமர் நாளை (இன்று) சபைக்கு அறிவித்தலை விடுக்க முடியுமா? என்றே ரணில் கேள்ளி எழுப்பினார்.

ரணில் கேள்வி எழுப்பியபோது பிரதமர் டி.எம்.ஜயரட்ண, சபை முதல்வரும் அமைச்சருமான நிமால் சிறீபால டி சில்வா, முன்னாள் பிரதமரும் அமைச்சருமான ரத்ன சிறீ விக்கிரமநாயக்க மற்றும் அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடக அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் அவையில் இருந்த போதிலும் எவ்விதமான பதிலயும் வழங்காது அமைதியாக இருந்து மெளனம் காத்துக்கொண்டிருந்தனர்.

இதேநேரம் சபாநாயகர் சபையின் அடுத்த கட்ட நடவடிக்கையான வரவு- செலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதத்திற்கு சபையைக் கொண்டு சென்றார்.

செயலாளர் நாயகம் பான் கீ மூனால் நியமிக்கப்பட்டிருக்கும் மூவரடங்கிய நிபுணர் குழுவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அமைச்சர் வீரவன்ச தலைமையிலான குழுவினர் நேற்று முன்னாள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to ஐ.நா. அலுவலக முற்றுகை தொடர்பில் அரசு மெளனம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com