தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்தியாவின் உயர்மட்டப் பிரதிநிதிக ளுடன் பேச்சுக்களில் ஈடுபடும் அதேவேளை. கூட்டமைப்பினருடன் பேசும் விடயங்களை இலங்கை அரசுடன் பேசுவதற்கு இந்திய அதிகாரிகள் இலங்கைக்கு பயணிப்பர் என்று தெரிவிக்கப்படுகின்றது.இந்திய அரசின் அழைப்பை ஏற்று இந்தியா சென்றுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உயர் மட்டக் குழு இந்திய அரச முக்கியஸ்தர்களுடன் பேச்சுக்களில் ஈடுபடும் அதேவேளை பேசப்பட்ட விடயங்கள் தொடர்பிலான கருத்துப் பகிர்வுகளை இந்திய அதிகாரிகள் இலங்கை அரசின் உயர்மட்டத்தினருடன் உடனுக்குடன் மேற்கொள்வர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கென இரண்டு அதிகாரிகள் இலங்கைக்கு அனுப்பப்படுவர் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு மேற்கொள்கின்ற சந்திப்புக்களின் போது தமிழ் மக்களின் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பான முக்கிய பல முடிவுகள் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்தியாவிற்கு இரா.சம்பந்தன் தலைமையில் பயணித்துள்ள குழுவினரில் மாவை சேனாதிராசா, சுரேஸ் பிறேமச்சந்திரன், செல்வம்அடைக்கலநாதன், அப்பாத்துரை விநாயக மூர்த்தி மற்றும் சுமந்திரன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆளும் அரசுடன் பேச்சுக்களில் ஈடுபடும் அதேவேளை எதிர்க்கட்சியின் முக்கியஸ்தர்களுடனும் பேச்சுக்களில் ஈடுபடும் என தெரிவிக்கப்படுகின்றது.



0 Responses to கூட்டமைப்புடன் பேசப்படும் விடயங்கள் குறித்து உடனுக்குடன் இலங்கையுடன் பேச இந்தியா ஏற்பாடு!