முல்லைத்தீவு திருமுறிகண்டிப் பகுதியில் 5000 ஏக்கர் தமிழர் நிலம் பறிக்கப்பட்டு அங்கு 12 ஆயிரம் சிங்கள இராணுவ குடும்பங்களுக்கு வீடுகள் அமைக்கப்படுகின்றன. என்று சண்டே லீடர் மஹிந்தவின் சிங்கள குடியேற்றம் எனும் தலைப்பில் இக் குடியேற்றம் பற்றி தகவல் வெளியிட்டுள்ளது.அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
வடக்கில் தமிழரது சனத்தொகை ஆதிக்கத்தை குறைத்தல், தமிழர் தமது தாயகம் எனும் கோட்பாட்டை சிதைத்தல், எப்போதுமே தமிழர்களை ஓர் அச்சுறுத்தலிற்குள் வைத்திருத்தல் போன்ற நீண்ட கால திட்டத்தினை அடிப்படையாக வைத்து இந்த திட்டம் மஹிந்தவினால் நன்கு திட்டமிட்டு நடைபெறுகின்றது.
12,000 இராணுவ குடும்பங்களும் அங்கு நிரந்தரமாக இருந்து பணியாற்றுவார்கள் அத்துடன் அவர்களுக்கான சிங்கள பாடசாலைகள், ஆஸ்பத்திரிகள்,பெளத்த கோயில் மற்றூம் பல பொது சேவைகள் உட்பட வர்த்தக நிலையமும் அமைக்கப்படவுள்ளதாக அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முற்றுமுழுதாக அங்கு மூன்று கிராமங்களில் உள்ள தமிழர்களை விரட்டியடித்துவிட்டு இந்த சிங்கள குடியேற்றம் மஹிந்தவினால் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
இஸ்ரேல் பாலஸ்தீன நிலங்களை அபகரித்து அங்கே யூத குடியிருப்புக்களை அமைப்பது போல மஹிந்த அதே பாணியில் திருமுறிகண்டியில் குடியேற்றங்களை நிறுவுவதாக கூறப்படுகின்றது.
மேலும் இந்த கட்டுரையாளர் மஹிந்தவை எச்சரிப்பது என்னவெனில் மீண்டும் ஓர் ஆயுதப்போருக்கு மஹிந்த வித்திட்டுள்ளார்.
மீண்டும் ஓர் இனக்கலவரம் ஏற்படுவதற்கு இந்த திட்டம் அடித்தளம் இடுகின்றது.
தெற்கில் தமிழர்கள் வாழ்கின்றார்கள் அதனால் வடக்கில் சிங்களவர் வாழ்ந்தால் என்ன என்ற மஹிந்தவின் கேள்வியினை ஏற்க முடியாது. காரணம் தெற்கில் தமிழர்கள் தாமாகவே குடியேறியுள்ளனர்.
மஹிந்த செய்வதனைப்போன்று அரச ஆதரவுடன் இவ்வாறான திட்டமிட்ட குடியேற்றங்கள் ஊடாக அவர்கள் குடியேறவில்லை என்றும் வாதாடியுள்ளார்.
எது எவ்வாறு இருப்பினும் 2011 ஆம் ஆண்டிற்குள் முறிகண்டி நகர் 75,000 சிங்களவர்களைக்கொண்ட ஓர் சிங்கள நகரமாக காட்சிதரப்போவது உண்மை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்



0 Responses to முறிகண்டிப் பகுதியில் 12 ஆயிரம் சிங்களக் குடும்பங்களுக்கு வீடுகள்: சண்டேலீடர்!