Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அண்மையில் இந்தியாவில் இடம்பெற்ற பொதுநலவாய போட்டிகளின் நிறைவு விழாவில் கலந்து கொண்ட ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, அவமதிக்கப்பட்டதாக சண்டே லீடர் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, விழாவின் சிறப்பதிதியாக அழைக்கப்பட்டுள்ளதாக, இலங்கை அரசாங்கம் பிரசாரம் செய்து வந்தது. இதன் அடிப்படையிலேயே கடந்த புதன்கிழமையே ஜனாதிபதி இந்தியாவுக்கு புறப்பட்டு சென்றார்.

அங்கு பிரித்தானிய இளவரசர் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களுக்கு அருகிலேயே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் அமர்ந்திருந்தார்.

இதன் போது வருகை தந்த இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குடன் கைலாகு செய்ய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பெரும் ஆர்வத்துடன் சென்ற போதும், மன்மோகன் சிங் அதனை பெரிதாக கண்டுக் கொள்ளவில்லை.

இது,இந்த விழாவில் கலந்து கொள்ளவந்த 65 ஆயிரம் பார்வையாளர்கள் மற்றும் உலகம் முழுவதும் நிகழ்வை தொலைக்காட்சியில் பார்வையிட்ட கோடிக்கணக்கான தமிழ் மக்கள் மத்தியில், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவமானப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் இந்த கருத்த வெளியிட்டுள்ளனர்.

அத்துடன், இந்த நிகழ்வில் விசேட விருந்தினராக ஜனாதிபதி அழைக்கப்பட்டதாக முன்னர் பிரசாரம் செய்யப்பட்ட போதும், அவருக்கு இந்த நிகழ்வில் உரையாற்றுவதற்கேனும் சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை.

ஜனாதிபதியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கானவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த வேளையில், அவர் சிறப்பதிதியாக அழைக்கப்படவில்லை என்பதும், அவருக்கு உரையாற்ற வாய்ப்பளிக்கப்படவில்லை என்பதுவும், பெரிய அவமானத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to காமன்வெல்த் போட்டிகளின் நிறைவு விழாவில் மகிந்த அவமதிக்கப்பட்டார்: சண்டே லீடர்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com