Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இந்தியப் பிரதமர் மன் மோகன் சிங் மலேசிய மண்ணில் கால்பதிக்க முடியாது. ஏனெனில் அவர் ஒருதுரோகிஎன அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

இதுபற்றி மலேசிய இணையத்தளமானபிரீமலேசியாடுடே’ [freemalaysiatoday] என்ற இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இது பற்றி கருத்துக்கூறியுள்ள மலேசிய நுகர்வோர் ஆலோசனை சபையைச் சேர்ந்த வரதராசு,

ஓராண்டிற்கு முன்னர் 80,000 இலங்கைத் தமிழ் மக்கள் கொல்லப்படுவதில் இந்திய அரசாங்கம் முக்கிய பங்கு வகித்தது.

மலேசிய அரசாங்கம் இங்கு மன்மோகன் சிங்கை அழைத்திருக்கக் கூடாது

இந்தியப் பிரதமர் கோலாலம்பூரை ஒக்ரோபர் 27 அன்று வந்தடைவார் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அவர் அதிகார பூர்வமாக புதிதாக தோற்றமளிக்கும் பிறிக்பீல்டையும்குட்டி இந்தியாஎன்ற பெயரில் திறந்துவைக்கவுள்ளார்.

சிறிலங்கா தமிழ் மக்களுக்கு எதிராகப் புரிந்த குற்றங்களுக்கு எதிராக .நா. சபையால் மேற்கொள்ளப்படவிருந்த ஒழுக்காற்று நடவடிக்கையிலிருந்து தப்புவதற்கும் இந்தியா அதற்கு உதவியுள்ளதாக வரதராசு தெரிவித்தார்.

உலகிலுள்ள இந்தியர்களின் பிரச்சினைகள் தொடர்பில் மன்மோகன் தலைமையிலான இந்திய அரசாங்கம் ஒருபோதுமே கவனத்தில் எடுத்ததில்லை.

உலகளாவிய ரீதியில் தமிழ் மக்களுக்குத் துரோகம் இழைத்திருப்பதால் அவர் மலேசியாவிற்குள் நுழைவதற்குத் தகுதியானவரல்லஎன அவர் மேலும் தெரிவித்தார்.

புலமைப்பரிசில்களை எதிர்பார்க்கும் மனித உரிமைக் கட்சி

இதேவேளை, மலேசியாவிலுள்ள இந்திய மாணவர்களுக்குக் கல்விப் புலமைப்பரிசில்களை வழங்குமாறு இந்திய அரசாங்கத்தைக் கோரும் மனு ஒன்றை மன்மோகன் சிங்கிடம் கையளிப்பதற்கு மனித உரிமைக் கட்சி திட்டமிட்டுள்ளது.

மலேசிய அரசாங்கம் கைக்கொள்ளும் கோட்டா முறைமை காரணமாக உயர்கல்விக்கான அனுமதியை இழந்து நிற்கும் இந்திய மாணவர்களின் நிலையைக் காட்டுவதற்கு இதுவே சரியான தருணம் என்பதால், இந்த கோரிக்கையை மேற்கொள்ள நாம் விரும்புகிறோம்என மனித உரிமைக் கட்சியின் செயலாளர் உதயகுமார் தெரிவித்தார்.

தமது கட்சிக்கு மன்மோகன் சிங்க் அவர்களைச் சந்திப்பதற்கு வெறும் 30 நிமிடங்கள் ஒதுக்கினாலே போதுமானதெனவும் அது சாத்தியமாகாவிட்டால், அவரது பிரதிநிதியைச் சந்திப்பதில் மனித உரிமைக் கட்சி மகிழ்வடைகிறது எனவும் அவர் தெரிவித்தார்.

தமது சாதாரண தரப் பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற இந்திய மாணவர்களுக்கும் உயர் கல்வி வாய்ப்புக்கள் மறுக்கப்பட்டிருப்பதால், மலேசியாவில் உள்ள இந்திய மாணவர்கள் மத்தியில் கல்வியறிவை ஊக்குவிப்பதற்கான தேவை இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

தற்போது மிகவும் சிறந்த பெறுபேறுடைய மலேசிய இந்திய மாணவர்களுக்குக் கூட புலமைப் பரிசில்களுக்கும் பொது பல்கலைக் கழகங்களில் அனுமதியை வாய்ப்புக்களையும் அரசாங்கம் திட்டமிட்டமுறையில் மறுத்துவருவதாக அவர் கூறினார்.

இது மலேசிய அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் இனரீதியான பாகுபாட்டுக் கொள்கையின் நேரடி விளைவாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மலேசியாவுக்கும் இந்தியாவுக்குமிடையே பொருளாதாரக் கூட்டுறவு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டு இரு நாடுகளுக்குமிடையிலான வர்த்தகம் வேகமெடுக்கும் நேரத்தில், இந்தப் பிரச்சினை மலேசிய இந்தியர்களுக்கு மட்டுமன்றி, மலேசியாவில் முதலிடுவதற்கு எண்ணியுள்ள இந்திய வர்த்தக நிறுவனங்களுக்கும் மனித வலுவுக்கும் அரசியல்மூலோபாய தாக்கங்களை ஏற்படுத்தக்கூடியது.

மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to துரோகி மன்மோகன் சிங்கிற்கு மலேசியாவிற்குள் நுழைய அருகதை கிடையாது

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com