கூட்டத்தில் திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தென்றல்சந்திரசேகர், மாநில ஒருங்கிணைப்பாளர்கள் வழக்கறிஞர் மணி.செந்தில்,வழக்கறிஞர்.அ.நல்லதுரை ,தலைமை பொறுப்பாளர்களில் ஒருவரானதமிழ்முழக்கம்.சாகுல் அமீது ஆகியோர் சிறப்புரை ஆற்ற உள்ளனர். மாணவரணிபொறுப்பாளர் முகமது இர்சாத் வரவேற்புரை ஆற்ற பந்தநல்லூர் கண்ணன் நன்றிநவில்கிறார். திருவிடைமருதூர் ஒன்றியத்தில் நாம் தமிழர் கட்சிகூட்டங்களுக்கு மட்டும் அனுமதி கொடுக்காமல் இருந்த காவல்துறை ,கும்பகோணம் நாம் தமிழர் கட்சியின் சார்பாக மதுரை உயர்நீதிமன்றத்தில்வழக்கு தொடுத்த பிறகு அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. பல தடைகளைதாண்டி நடைபெறும் இக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை கும்பகோணம் நாம் தமிழர்கட்சியினரும், பந்தநல்லூர் நாம் தமிழர் கட்சி கிளையினரும் வெகுபிரம்மாண்டமான முறையில் செய்து வருகின்றனர்.
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்



0 Responses to கும்பகோணம் அருகில் பந்தநல்லூரில் நாம் தமிழர் கட்சி சார்பாக கட்சியின் கண்டன பொதுக்கூட்டம்