Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்;துக்கான உறுதுணைக்குழு பிரான்சு தனது முதலாவது பொதுக்கூட்டத்தை பாரிசின் புறநகர் பகுதியான செவ்ரோன் பகுதியில் நடாத்தியுள்ளது.

இப்பொதுக்கூட்டத்தில் கலையரங்கு - விபரணம் - உரைகள் இடம்பெற்றன.

நாடு கடந்த தமிழீழ அரசின் யாப்புக்குழுவில் பங்காற்றிய ஜேர்மனிய மக்கள் பிரிதிநிதி ஜெயசந்திரன் இராஜரட்ணம் அவர்கள் இந்நிகழ்வில் சிறப்பழைப்பாளராக கலந்து கொண்டு யாப்பு குறித்தான விளங்கங்களை வழங்கினார்.

இரண்டாவது அமர்வின் காணொலி பதிவுகளும் திரையிடப்பட்டன.

மக்கள் பிரதிநிதி சுதன்ராஜ் அவர்கள் சமகால உலக ஒழுங்கில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றினார்.

மக்கள் பிரதிநிதி மகிந்தன் அவர்கள் நாடு கடந்த தமழீழ அரசாங்கத்தை எவ்வகையில் உறுதுணக்குழுவாக பலப்படுத்தாலம் என்பது பற்றி குறிப்பிட்டதோடு பொதுஅமைப்புக்களின் விடுதலைக்கான பங்களிப்புக்கள் குறித்தும் எடுத்துரைத்தாhர்.

யாப்பு மற்றும் நாடு கடந்த அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து மக்களால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மக்கள் பிரதிநிதிகள் விளங்கங்களை அளித்தனர்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு பலமூட்டும் முகமாக உறுதுணைக்குழுவால் இத்தகைய பொதுக்கூட்டங்கள் தமிழர்கள் செறிந்;து வாழும் பகுதிகளில் இடம்பெறும் என உறுதுணைக்குழுவின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

காணொளி: இங்கே அழுத்தவும்

0 Responses to நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான உறுதுணைக்குழு நடாத்திய பொதுக்கூட்டம்: பிரான்ஸ் (காணொளி இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com