வெளிநாடுகளில் இயங்கி வரும் நாடு கடந்த இராச்சியம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த அமெரிக்க எப்.பி.ஐ புலனாய்வுப் பிரிவின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்பட உள்ளதாக லக்பிம சிங்கள பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகளுடன் இணைந்து விசேட நடவடிக்கைகள் எடுப்பது குறித்து இரு நாட்டு தூதுவராலயங்களும் முயற்சி மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
புலிகளின் சர்வதேச வலையமைப்பு மற்றும் நடவடிக்கைகள் குறித்து அமெரிக்காவிற்கு சரியான முறையில் தெளிவுபடுத்தவும்இ தகவல்களை பரிமாறிக் கொள்ளவும் அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதரகம் நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு வெவ்வேறு பெயர்களில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
அரச சார்பற்ற நிறுவனங்கள்இ அரசியல் அமைப்புக்கள் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் விடுதலைப் புலிகள் இயங்கி வருவதாகவும் அமெரிக்காவிலும் புலிகள் செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
புலிகளின் வலையமைப்பு செயற்பாடுகள் குறித்து தெளிவுபடுத்த வேண்டியது தூதுவராலயத்தின் கடமையாகும் என தூதுவர் ஜாலிய விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்.
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்



0 Responses to நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தை வீழ்ச்சியடைச் செய்ய அமெரிக்காவின் உதவி பெற்றுக்கொள்ளப்படும்: அரசாங்கம்