இவ்விடயம் தொடர்பாக அவர் தகவல் தருகையில்....
யுத்தத்தின் பின்னரான் தற்போதைய நிலையில் விதவைகள் மற்றும் கணவன்மார் காணாமல் போய் தனிமையில் வாழும் பெண்கள் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இவர்கள் மீதான சமூகத்தின் நெருக்கடியும் அதிகரித்துள்ளது. இதுவே தற்கொலைக்கான பிரதான காரணியாகவுள்ளது.
இவற்றுக்கான தீர்வை மேற்கொள்வதென்பது தற்போதைக்கு முடியாத ஒன்று எனினும் உளரீதியான ஆற்றுப்படுத்தல்கள் போன்றவற்றை மேற்கொள்கின்றோம் .
இதனைப்போலவே தற்போது பாடசாலை செல்லாத சிறார்களின் எண்ணிக்கையும் உளநோயாளிகளின் எண்ணிக்கையும் கூட மாவட்டத்தில் அதிகரித்துள்ளது.
சிறார்கள் முகாம் வாழ்க்கைக்கு வெகுவாகப் பழகிக்கொண்டு விட்டனர். இதனால் பெரும்பாலான சிறார்கள் பாடசாலைக்குச் செல்லும் எண்ணத்தையே கைவிட்டுள்ளனர்.
அவர்களை தற்போதுள்ள சூழலுக்கு ஏற்ப ஆற்றுப்படுத்துவது நீண்டகாலவேலையாகவே இருக்கும் அதற்கு எல்லோருடைய ஓத்துழைப்பும் அவசியமானதொன்று.
உளநோயாளிகளைப் பொறுத்தவரை யுத்தத்திற்கு முன்னர் மாவட்டத்தில் 300 நோயாளிகள் காணப்பட்டனர். யுத்தம் மற்றும் இடப்பெயர்வினால் அவர்களில் 100 பேர் தொலைந்து போயுள்ளனர்.
எஞ்சியவர்களுடன் சேர்த்து தற்போது 500 பேர்வரையுள்ளனர். இவர்களில் 90 வீதமானவர்கள் யுத்தத்தில் தமக்கு நெருக்மானவர்களை இழந்துள்ளனர்.
இதுவே இவர்களின் உளநோய்க்கான பிரதான காரணியாகவுள்ளது. பெண்கள், சிறார்கள் போன்றோரே பெரியளவில் பாதிக்கப்படுகின்றனர்.
மாவட்ட வைத்திய சாலையில் விடுதி வசதிகள் போதுமானதாக இல்லை. மேலும் நோயாளர்களின் வீடுகளிற்கு நேரடியாகச் சென்றே சிகிச்சையளிக்க வேண்டியுள்ளது.
எனவே தூரநோக்கின் அடிப்படையில் பாதிக்கப்படக்கூடியவர்களை இனங்கண்டு உளரீதியான ஆற்றுப்படுத்தல் என்பது அவசியம் என்பதோடு அதுவொன்றே செய்யக்கூடிய சிகிச்சையுமாகும் என்றார்.



0 Responses to கிளிநொச்சி மாவட்டத்தில் யுத்தத்தின் பின்னர் தற்கொலைகள் அதிகரிப்பு!