Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லி ணக்க ஆணைக்குழுவின் விசாரணைப் பணி, யாழ்ப்பாணத்திலும் முடிபடைந்துவிட்டது. வன்னி யுத்தத்தின் போது நடந்த கொடூரங்களை கேட்டறிந்து கொள்வதற்காக இந்த ஆணைக் குழு நியமிக்கப்பட்டிருந்தது.

ஆணைக்குழுவில் இடம்பெற்றிருந்தவர்கள் இந்தக் குழுவில் இடம்பெறாமல் இருந்திருக்கலாம் என்று நினைக்கும் அளவிற்கு கண்ணீர்க் காவி யமாய் சாட்சியங்கள் அமைந்திருந்தன. என் பிள்ளை எங்கே? என் கணவர் எங்கே? அம்மாவை இழந்தேன், அப்பாவைப் பறிகொடுத் தேன், அண்ணாவைக் காணவில்லை, தம்பி யைத் தேடுகின்றோம், கடவுளே! எத்தனை துய ரம். இனப் பேதமை, மனித நேயமில்லாத மானி டச் சமூகம், எத்தனை துயரத்தை நமக்குத் தந்து விட்டன.

சாட்சியங்களைக் கேட்டவர்கள் நிச்சயமாக மனிதத்திற்காக அழுதிருப்பார்கள். இருந்தும் துரதிர்ஷ்டமாக ஆணைக்குழுவின் அதிகாரங் களும் எல்லைகளும் வரையறுக்கப்பட்டுள்ளன. அவர்கள் தங்களால் முடிந்தளவு பதிவு செய்து ஆயிரக்கணக்கான பக்கங்களில் அறிக்கை தயாரித்து அரசிடம் வழங்குவர். அதனோடு அவர்க ளின் பணி முடிந்தாகிவிடும்.

தாம் அனுபவித்த துன்பங்கள், துயரங்கள், அழுகைகள், சோகங்கள், மனித பரிதாபங்கள் அனைத்தையும் எழுத்தில் வடித்து விடுவது முடி யாத காரியம். எனவே அவர்களால் வழங்கப் படும் அறிக்கைகள் வன்னி யுத்தத்தில் பட்ட மிகப் பெரும் கொடூரத்தின் சிறு அளவை மட்டுமே பிரதி பலிப்பதாக இருக்கும். இதற்கு மேலாக பாதிக்கப்பட்ட எல்லோரும் ஆணைக்குழு முன் சாட்சியமளித்தார்களா என் றால் ஒரு வீதம் கூட இல்லை என்பதே நிஜம்.

நிலைமை இதுவாக இருக்கையில், ஆயிரக்க ணக்கான பக்கங்களில் இருக்கக்கூடிய அந்த அறிக்கையை வாசிப்தென்பதும் சாத்தியமான விடயமன்று.ஆக! கண்ணீர்க் காவியத்தின் ஒரு சாட்சிய மாக மட்டுமே கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கைகள் இருக்கப்போகின்றது என்பது தெளிவு.

சில வேளைகளில் ஆணைக்குழுவின் தலை வராக இந்த நாட்டின் ஜனாதிபதி இருந்து சாட்சி யங்களை செவிமடுத்திருப்பாராயின் மக்களின் கோரிக்கைகளுக்கு ஏதேனும் தீர்வு கிடைத்தி ருக்குமென நம்பலாம். ஆனால் அது நடக்கவில் லை. இந்த நாட்டில் சமாதானப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்து போவதற்கு நாட்டின் நிறை வேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியும், விடுதலைப் புலிகளின் தலைவரும் நேருக்கு நேர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தாமையே காரணம் என்ற நியாயப்பாடுகளின் மத்தியில்,ஆணைக்குழுவிலும் இந்த நாட்டின் ஜனாதிபதி இடம்பெறாமையானது,சாட்சியங்கள் எதிர்பார்த்த எதனையும் பெற் றுத்தருவதை உறுதி செய்வதாக இல்லை என்றே கூறவேண்டும்.

மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to கண்ணீர்க் காவியத்தின் வரலாற்றுப் பதிவாகிய சாட்சியம்: வலம்புரி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com