Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிறிலங்கா இராணுவம் எம்மின மக்களை கொன்று குவித்து அழிவை ஏற்படுத்தியதோடு சுனாமிப் பேரலையும் தாய்மண்ணில் அனர்தத்தை ஏற்படுத்தியது.

இருபதாயிரம் மக்களை அழித்து. பல இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழீழ மக்களை இடம்பெயர்ச் செய்து, பாரிய பொருளாதார இழப்பை எம்மினத்திற்கு ஏற்படுத்தியது, அந்த ஆழிப்பேரழிவை தமிழினம் மறந்துவிட முடியுமா? டிசம்பர் 26 - 2004ன் சுனாமிப் பேரவலத்தோடு தங்கள் சொந்த இருப்பிடத்தை விட்டு ஆறு ஆண்டுகளாய் அகதிகளாய் வாழும் எங்கள் சகோதரர் படும் துயரங்களை மறந்து நாம் அந்நியநாட்டில் அமைதியாய் வாழ முடியுமா?

உலகையே துயரத்தில் ஆழ்த்திய சுனாமிப் பேரவலத்தால் உயிரிழந்த இரண்டு இலட்சம் மக்களை உலகம் நினைவுகூரும் வேளை, டென்மார்க் வாழ் தமிழீழ மக்களும் ஆழிப்பேரலையால் உயிரிழந்த எம்சோதரர்களை நினைவுகூறி, மறக்கமுடியாத துயரத்தை மனதில் நிறுத்தி, சுனாமிப் பேரலையால் பாதிக்கப்கப்பட்ட எம்மினத்தவர் துயரம் தீர்க்க வழிவக்க வேண்டியதும், எங்கள் கடமை என்பதையும் நாம் நினைவில் நிறுத்திக் கொள்வோம். ஆழிப்பேரலையின் அவலத்தினை நினைவுகூறுவதோடு தமிழினம் ஒய்ந்துவிட முடியாது. சிறீலங்காவின் ஆக்கிரமிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்pன்றது. தமிழீழத்தை இராணுவம் சுற்றிவளைத்து, சிறைப்படுத்தி.

மக்களை துயரத்தில் ஆழ்த்தி, அடிமையாக்கி சிங்கள ஆட்சியை இலங்கையில் நிலைநிறுத்தி தனது முழுப்பலத்தையும், அந்நிய நாடுகளின் உதவியுடன் மேற்கொண்டு வருகிறது.

தமிழ்ப்;பிரதேசங்களில் இராணுவக்குவிப்பு, சிங்களமொழிக்கல்வி,சிங்களத் தேசியகீதம் போன்றவற்றை தமிழீழ மக்கள் மத்தியில் திணித்து, தமிழீழப் பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி, பல தீய சக்திகளை எங்கள் தாய்மண்ணுக்குள் ஊடுருவச் செய்து, எங்கள் தாய்நில மக்களை அழித்தொழிக்கின்றது. பயந்து, சுதந்திரமின்றி வாழும் தமிழீழ மக்கள் சுதந்திரமாக வாழ வழிசெய்ய வேண்டியது புலம் பெயர் தமிழினத்தின் பொறுப்பாகும்.

காலமிட்ட கட்டளைப்படி நாம் விழித்தெழுந்து, பணிதொடர்வோம். உலகம் விழிப்பாக எழுந்து, சிறீலங்கா அரசின் போர்குற்றங்களை ஆராயத் தொடங்கிவிட்டது. பல மனித உரிமை அமைப்புக்கள் சிறீலங்கா அரசு செய்த கொடுமைகளை பேசத்தொடங்கிவிட்டது.

எம்மவர் துயரங்கள் தீர உலக நீதியாளர்கள் ஒன்றினையும் வேளை, அவர்களுக்குத் தேவையான தகவல்களை கொடுத்துதவி, சிறிலங்கா அரசின் போர்க் குற்றச் செயல்களை உலகுக்கு எடுத்துரைத்துரைப்போம்.

முள்ளுக்கம்பி வேலிகளுக்குள் அடைக்கப் பட்டு, ஒட்டு மொத்தத் தமிழினமும் சிங்கள ஆட்சியாளர்களால் அடக்கி ஒடுக்கப்பட்டுச் சுதந்திரம் பறிக்கப்பட்டு, சிங்கள இராணுவ முற்றுகைக்குள்ளும் வாழவழியின்றி, துயரத்தோடு வாழும் எம்மினம் நிரந்தர சுதந்திரத்தைப் பெற்று வாழவழி வகுப்போமென உறுதியெடுத்து, ஆழிப்பேரவலத்தை நினைவுகூரும் நாளில் ஒற்றுமையாக இணைந்து, சிறீலங்கா அரசின் கொடிய ஆட்சியை உலகுக்கு உணர்த்துவோம்.

டென்மார்க் தமிழர் பேரவை

0 Responses to சுனாமிப் பேரழிவை மறப்போமா!!: டென்மார்க் தமிழர் பேரவை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com