Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

போர்க்குற்றம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வரும் .நா. நிபுணர் குழு இலங்கைக்கு வருவதால் தமிழ் மக்களுக்கு நன்மை எதுவும் ஏற்படப்போவதில்லை என தமிழ்த்தேசிய விடுதலைக்கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்:

இன்றுவரை இலங்கையில் அமைக்கப்பட்ட எந்த ஆணைக்குழுவும் எதுவித தீர்வையும் தராத நிலையில் வெறும் கண்துடைப்புக்காக ஏற்படுத்தப்பட்ட கற்றறிந்த பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக் குழுவானது அதிகாரமற்ற ஓர் ஆணைக்குழுவாக செயற்பட்டு வருகின்றது.

அதுபோலவே .நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்த நிபுணர் குழுவும் காணப்படுகிறது. குறைந்தபட்சம் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் விபரங்களையாவது இவர்களால் இதுவரை வெளியிட முடியவில்லை.

எனவேதான் போரினால் கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கோ அல்லது படுகொலை செய்யப்பட்டோரின் உறவினர்களுக்கோ இன்றுவரை எந்தத்தீர்வும் கிடைக்கவில்லை. இனியும் கிடைக்கப் போவதில்லை என தெரிவித்தார்.

0 Responses to ஐ.நா. நிபுணர் குழு வருகையால் தமிழருக்கு பயன் எதுவுமில்லை: சிவாஜிலிங்கம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com