Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்திலிருந்து அமைச்சர் மேர்வின் சில்வா வெளியேற்றப்பட்டிருந்ததுடன், ஜனாதிபதியிடமிருந்து நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டதாகவும் தெரிய வருகின்றது.

அமைச்சரவைக் கூட்டங்களுக்கு சமூகமளிக்கையில் கண்ணியமான ஆடைகளை அணிந்து வரவேண்டும் என்று அண்மையில் அனைத்து அமைச்சர்களுக்கும் ஜனாதிபதி உத்தரவிட்டிருந்தார்.

ஆயினும் நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்திற்கு சமூகமளித்த பொதுமக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வா குட்டைக் கை பத்திக் சேர்ட் அணிந்து வந்திருந்தார்.

அதனைக் கண்ணுற்ற ஜனாதிபதி உடனடியாக அமைச்சரவைக் கூட்டத்திலிருந்து வெளியேறுமாறு அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு உத்தரவிட்டதுடன், குண்டர்கள் போன்று கண்டபடி ஆடையணிந்து கொண்டு வர வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளார்.

0 Responses to மகிந்தாவிடம் நல்ல வாங்கிக்கட்டிய மேர்வின்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com