அதற்கு ஏதுவாக யுத்த காலத்தில் சரத் பொன்சேகா கலந்து கொண்ட பாதுகாப்புப் படை தொடர்பான நிகழ்வுகள், இராணுவ உயரதிகாரிகளுடனான கலந்துரையாடல்கள், பாதுகாப்புக் கவுன்சில் கலந்துரையாடல்கள், இராணுவ முகாம்களுக்கான விஜயங்கள் என்பன தொடர்பான ஒளி, ஒலி நாடாக்கள் அனைத்தும் தற்போது அரசாங்கத்தின் தீவிர பரிசீலனைக்குட்படுத்தப்பட்டு வருவதாக தெரிய வந்துள்ளது.
அவற்றிலிருந்து தேவையான ஆதாரங்களைத் திரட்டியெடுப்பதற்கு அரசாங்கத்துக்கு நம்பிக்கையான அரச மற்றும் இராணுவ அதிகாரிகள் குழுவொன்று ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
பிரஸ்தாப நாடாக்களில் சரத் பொன்சேகா சட்டவிரோதமான செயல்கள் தொடர்பாக ஏதேனும் வார்த்தைகளை உதிர்த்திருக்கும் பட்சத்தில் அவற்றை மூன்றாந்தரப்பு வெளியிட்டதாகக் காட்டிக் கொண்டு அரசாங்கமே வெளியில் கசிய விடத் தீர்மானித்துள்ளது.
அதன் மூலம் சரத் பொன்சேகாவும் அவருக்கு நெருக்கமான அதிகாரிகள் சிலரும் மட்டுமே போர்க்குற்றங்கள் தொடர்பான விடயங்களில் சம்பந்தப்பட்டுள்ளதாக காட்டிக் கொண்டு தப்பித்துக் கொள்ள அரசாங்கம் திட்டமிடுவதாக தெரிய வருகின்றது.
தற்போதைய நிலையில் சரத் பொன்சேகா மீது அரசாங்கம் சிறைத் தண்டனை விதித்துள்ளதால், போர்க்குற்றங்கள் தொடர்பில் அவர் குற்றம் சாட்டப்பட்டாலும் மேலதிக தண்டனைகள் விதிக்கத் தேவைப்படாது என்பதாக அரசாங்கம் கருதுகின்றது.
ஆயினும் சரத் பொன்சேகாவின் ஆதரவாளர்களாக இருந்து தற்போது வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்திருக்கும் முன்னாள் இராணுவ அதிகாரிகளை போர்க்குற்றங்களுடன் தொடர்புபடுத்தி தண்டனை வாங்கிக் கொடுக்கவும் அரசாங்கம் கவனம் செலுத்துகின்றது.
அதன் மூலம் இராணுவத்தினரைக் காட்டிக் கொடுத்த அவப் பெயரிலிருந்தும் தப்பித்துக் கொள்வதுடன், சரத் பொன்சேகா மற்றும் அவரின் ஆதரவாளர்களைத் தண்டித்த திருப்தியும் அரசாங்கத்துக்குக் கிட்டும்.
மறுபுறத்தில் பொன்சேகாவுக்கு வெளிநாடுகளில் இருக்கும் ஆதரவுத் தளங்களைச் சிதைத்து அவற்றை அரசுக்கு சார்பானதாக மாற்றிக் கொள்ளவும் முடியும் என்றும் அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.
அத்துடன் இதுபோன்ற இன்னும் பல விடயங்களின் மூலமாக சரத் பொன்சேகாவையும் அவரின் ஆதரவாளர்களையும் தண்டிப்பதுடன், அவரது கட்சியையும் சிதறடித்து சரத் பொன்சேகாவின் அரசியல் எதிர்காலத்தைச் சிதைப்பதற்கும் அரசாங்கம் திட்டங்களைத் தீட்டி வருவதாக ஜனாதிபதிக்கு நெருக்கமான உயரதிகாரியொருவர் மூலமாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.



0 Responses to பொன்சேகா மீது போர்க்குற்றத்தை சுமத்திவிட்டு அரசாங்கம் தப்பிக்க முயற்ச்சி