Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மாமனிதர் யோசெப்பரராஐசிங்கம் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட 5வது ஆண்டு நினைவு நிகழ்வு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் சனிக்கிழமை(1-1-2011) மாலை 3.00 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்றது.

இல 43, 3ம் குறுக்குத்தெரு, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்மாவட்ட அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வுக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தலைமைதாங்கினார்.

இந்நிகழ்வில் ஈகைச் சுடரினை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் வைத்தியர் திருலோகமூர்த்தி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் பிரசாரச் செயலாளர் திரு.இளங்கோ, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகள் இருவர் மாமனிதர் சிவநேசன் அவர்களது மைத்துனர் கண்ணன் ஆகியோர் ஏற்றிவைத்தனர்.

மாமனிதரது திருவுருவப்படத்திற்கு ...காங்கிரஸ் கட்சியின் பிரசாரச் செயலாளர் திரு.இளங்கோ அவர்களும், மாமனிதர் சிவநேசன் அவர்களது மைத்துனர் திரு.கண்ணன்அவர்களும் மலர்மாலை அணிவித்தனர். தொடர்ந்து அகவணக்கம் இடம்பெற்றது. தொடர்ந்து நிகழ்வுக்குத் தலைமை தாங்கிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முக்கிய உறுப்பினருமான திரு.செல்வராசா கஜேந்திரன் தலைமை உரை நிகழ்த்தினார்.

அதனைத் தொடர்ந்து மாமனிதர் யோசெப்பரராஐசிங்கம் நினைவாக போரால் பாதிக்கப்பட்டு வறிய நிலைக்குள் தள்ளப்பட்ட 10 பல்கலைக்கழக மாணவர்களுக்கு தலா ஐயாயிரம்(5000)ரூபா வீதம் வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மாமனிதர் கிட்டினன் சிவநேசன் அவர்களது நினைவாக போரால் பாதிக்கப்பட்டு வறிய நிலைக்குள் தள்ளப்பட்ட 10 பல்கலைக்கழக மாணவர்களுக்கு தலா ஐயாயிரம்(5000)ரூபா வீதம் வழங்கப்பட்டது. மொத்தம் 20 பல்கலைக்கழக மாணவர்களுக்கு தலா ஐயாயிரம் ரூபா வீதம் மொத்தம் ஒரு இலட்சம் பெறுமதியான உதவுதொகை வழங்கப்பட்டது.

புலம்பெயர்ந்து வாழும் தமிழ் உறவுகளின் உதவியுடன் இந்த உதவித்தொகை வழங்கப்பட்டது.
உதவு தொகையினை மாமனிதர் சிவநேசன் அவர்களது மைத்துனர் கண்ணன் அவர்களும் வைததியர் திருலோகமூர்த்தி அவர்களும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் அவர்களும் வழங்கி கெளரவித்தனர்.

இந்நிகழ்வில் பெருமளவு மாணவர்களும், தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆதரவாளர்களும் கலந்து கொண்டு மாமனிதருக்கு மலரஞ்சலி செலுத்தினர்.

0 Responses to மாமனிதர் யோசெப்பரராஐசிங்கம் அவர்களது 5வது ஆண்டு நினைவு நிகழ்வு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com