நீதித்துறையின் வருட இறுதி நிலவரங்கள் குறித்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும், பிரதம நீதியரசர் அசோக டி சில்வாவுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று அண்மையில் இடம்பெற்றது.
இந்த சந்திப்பின் போது சரத் பொன்சேகாவின் வழக்கில் அவருக்கு எதிரான தீர்ப்பு ஒன்றை முன்வைக்குமாறு ஜனாதிபதி, நீதியரசரிடம் கோரியுள்ளார்.
எனினும் இதற்கு மறுப்பு தெரிவித்த நீதியரசர், தற்போதும் சரத் பொன்சேகாவின் வழக்கு நீதி முறைகளை மீறி சென்றுள்ளமையை சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் அவ்வாறு நடந்து கொள்வது, மக்களின் நீதித்துறை மீதான நம்பிக்கையை இல்லாது செய்யும் என குறிப்பிட்டுள்ளார்.
நீதியரசரின் கருத்தை அடுத்து ஆத்திரமடைந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, எந்த நாட்டில் இலங்கையைப் போல நீதித்துறைக்கு அதிக வளங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன? எந்த நேரத்தில் எதனை செய்ய வேண்டும் என தாம் அறிவேன் என குறிப்பிட்டுள்ளார்.
எனினும் தம்மை அழைத்தமைக்கு நன்றித் தெரிவித்துக் கொண்ட நீதியரசர், நீதித்துறையில் அரசியலை கலக்க வேண்டாம் என கோரியுள்ளார்.
இதனை அடுத்து ஆத்திரத்தை கட்டுப்படுத்த முடியாத ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, சந்திப்பை நிறைவு செய்யாது அங்கிருந்து எழுந்து சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தநிலையிலேயே இவ்வாறான கெடுபிடிகளுடன் தமக்கு பதவியில் இருக்க முடியாது என கூறியுள்ள பிரதம நீதியரசர், தமது பதவி விலகல் கடிதத்தை கையளித்ததாக கூறப்படுகிறது.



0 Responses to பொன்சேகாவிற்கு எதிரான தீர்ப்பு - பிரதம நீதியரசர் பதவி விலகுகிறார்