சாட்சியங்களைப் பதிவுசெய்யவேண்டியவர் நித்திரையில் தூங்கி வழிகிறார். ஏதோ பெரிதாக வேலைசெய்து வெட்டி முறித்தவர்போல, ஒரு அசமந்தமாக இவர் தூங்குவதைப் பார்த்தீர்களா? இவர்களுக்கா தெரியப்போகிறது தமிழர் படும்பாடு. ஜனாதிபதியால் அமைக்கப்பட்ட ஆணைக்குழு தமக்கு ஏதாவது செய்யும் என நம்பிவந்த மக்களை, அவர்கள் சொல்லவந்ததைக் கூடக் கேட்க சிங்களம் தயாராக இல்லை. இங்கே குறட்டை விட்டு உறங்கும் ஆணைக்குழுவின் உறுப்பினரை, மற்றைய உறுப்பினர் தட்டி எழுப்பக்கூடத் தயார் இல்லை. காரணம் தூக்கம் கெட்டுவிடும்...
தமிழர்களை ஒரு பொருட்டாகவே சிங்களம் மதிக்கவில்லை. இந் நிலையில் மேலும் மேலும் அரசை நம்பி ஏமாரும் பாமரத் தமிழர்கள் நிலை மேலும் கவலைக்கிடமாகப் போகிறது என்பது, இங்கே தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது.



0 Responses to இப்படியும் ஒரு ஆணைக்குழுவை எங்கேயாவது பார்த்தது உண்டா? (படம் இணைப்பு)