Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கைக்கு கடத்தப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ள 136 தமிழக மீனவர்கள், இன்று விடுதலை ஆகிறார்கள் என, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

கடந்த 15ஆம் தேதி நாகப்பட்டினத்தை சேர்ந்த 112 மீனவர்கள், சிங்கள மீனவர்கள் மற்றும் கடற்படையினரால் கடத்திச்செல்லப்பட்டு இலங்கை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள், அந்நாட்டு நீதிமன்றத்தின் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு, யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் 136 தமிழக மீனவர்கள் இலங்கையில் சிறை வைக்கப்பட்டு இருப்பதற்கு, இந்திய வெளியுறவு துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.

சிறை வைக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும் உடனடியாக விடுதலை செய்யும்படியும் இலங்கை அரசிடம் அவர் வற்புறுத்தி இருக்கிறார்.

இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.எம்.கிருஷ்ணா:

"இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பெரிஸ்சுடன் தற்போதுதான் டெலிபோனில் தொடர்பு கொண்டு, தமிழக மீனவர்கள் சிறை வைக்கப்பட்டு இருப்பதற்கு இந்தியாவின் சார்பில் கண்டனத்தையும், கவலையையும் தெரிவித்தேன்.

இலங்கை மீனவர்கள், சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக்கொண்டு நமது மீனவர்களுடன் மோதல் போக்கை கடைப்பிடிப்பதற்கும் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொண்டேன். அடுத்த கட்ட நடவடிக்கையாக, இரு தரப்பு கூட்டு செயல் நடவடிக்கை குழு விரைவில் கூடிப்பேசி விவாதிக்க வேண்டும் என்றும் வற்புறுத்தினேன்.

இருநாட்டு மீனவர்கள் சங்க பிரதிநிதிகளும் சந்தித்துப் பேசி, சர்வதேச கடல் எல்லையில் மீன்பிடிப்பது குறித்து அவர்களுக்குள் ஒரு புரிந்துணர்வுக்கு வரவேண்டும் என்றும் யோசனை தெரிவித்து இருக்கிறேன். கச்சத்தீவுக்கு என்று தனி வரலாறு உள்ளது. அது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம், சர்வதேச நடைமுறைக்கு உட்பட்டது. எனவே இந்த விவகாரத்தில், யாரும் தனிப்பட்ட எந்த முடிவும் எடுக்க முடியாது.

இந்தியா இலங்கைக்கு இடையே எப்போதும் பரஸ்பரம் நல்லுறவு இருந்து வருவதால், இந்த பிரச்சினையில் பதற்றத்தை தணிப்பதற்கு நாம் அனைவரும் உதவியாக இருக்க வேண்டும் என்றும், சிறை வைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழக மீனவர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் அவரிடம் கேட்டுக்கொண்டேன்.

இலங்கை அரசின் தலைமை வக்கீலிடம் பேசி அதற்கான நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்து இருக்கிறார். இலங்கையில் இன்று (அதாவது நேற்று) கோர்ட்டுகளுக்கு விடுமுறையாகும். நாளை (இன்று) கோர்ட்டுகள் திறந்தவுடன், சிறை வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்யப்படுவார்கள் என்று நம்புகிறேன் என்றார்.

0 Responses to இன்று 136 தமிழக மீனவர்கள் விடுதலை ஆகிறார்கள்: எஸ்.எம்.கிருஷ்ணா தகவல்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com