சுதந்திர தினத்திலன்று முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.நாட்டுக்கு சுதந்திரம் பெற்றுக் கொடுத்த சரத் பொன்சேகா சிறைத் தண்டனை அனுபவித்து வரும் அதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக ஆயுதங்களை கொள்வனவு செய்த குமரன் பத்மநாதன் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்வதாக கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
சரத் பொன்சேகா சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் கொண்டாடப்படும் சுதந்திரம் அர்த்தமற்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் சுதந்திர தின நிகழ்வுகளை தமது கட்சி புறக்கணிக்கத் தீர்மானித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதற்காக பாடுபட்ட சரத் பொன்சேகாவை சுதந்திர தினத்திலன்று விடுதலை செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.



0 Responses to சுதந்திர தினத்தன்று சரத் விடுதலை செய்ய வேண்டும்: ஐதேக