Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடர்பாக யார் அதிகாரம் செலுத்துவது என்பது தொடர்பில் அமைச்சர் பசில் மற்றும் முரளிதரன் ஆகியோருக்கிடையில் அதிகார முறுகல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிழக்கு மாகாணத்தின் இயல்பு வாழ்க்கையைக் கட்டியெழுப்புதல் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள், தொழில் முயற்சிகள் என்பவற்றை ஆரம்பிப்பது தொடர்பில் முரளிதரன் சாத்தியமான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார்.

அதன் போது வழங்கப்படும் ஒப்பந்தங்களில் கிழக்கு மட்டுமன்றி இலங்கையின் எந்தப் பாகத்தைச் சோ்ந்தவராக இருந்தாலும் உள்நாட்டவர்களுக்கு முதலிடம் கொடுத்துச் செயற்படுவதே அவரது முக்கிய எதிர்பார்ப்பாகும்.

ஆயினும் அமைச்சர் பசில் ராஜபக்ஷ அதனைப் புறக்கணித்து முற்றுமுழுதாக வெளிநாட்டவர்களை மையமாக வைத்தே அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றார். அல்லது உள்நாட்டவர்களுக்கு முட்டுக்கட்டை போடுவதில் முன்னிற்கின்றார்.

திருகோணமலை குச்சவெளியில் சுற்றுலா அபிவிருத்தித் தலம் அமைக்கும் முயற்சி கூட அதற்கான ஒரு எடுத்துக் காட்டாகக் கொள்ள முடியும். அதன் போது உள்நாட்டு வர்த்தகர்கள் அங்கு முதலீடு செய்ய முடியாதவாறு கடும் நிபந்தனைகள் போடப்பட்டுள்ளன.

இவ்வாறான விடயங்கள் காரணமாக அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் முரளிதரன் ஆகியோருக்கிடையில் அதிகார ரீதியான முரண்பாடுகள் தலைதூக்கத் தொடங்கியுள்ளதாக அறிய முடிகின்றது.

0 Responses to அமைச்சர் பசில், முரளிதரன் இருவருக்குமிடையில் முறுகல் நிலை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com