இதன் தொடர்சியாக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (20-02-2011) சுவிஸ்-சூரிச் மாநகரில் தேசிய அட்டை உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமை அமைச்சர் திரு.விசுவநாதன் உருத்திரகுமாரன் அவர்கள் காணொளியூடாக சிறப்புரையாற்றுகின்றார்.
நாடுகடந்த தமிழீழ அரசின் மக்கள் பிரதிநிதிகள் - அமைச்சர்கள் - துணையமைச்சர்கள் என பலரும் இதில் கலந்து கொள்கின்றனர்.
உலக நாடுகளின் கவனத்தைப் பெற்று வருகின்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தற்போதைய செயல்பாடுகள் எதிர்கொள்கின்ற சவால்கள் என பல்வேறுபட்ட விடயங்கள் குறித்தும் நிகழ்வில் எடுத்துரைக்கப்படவுள்ளது.
தமிழர்களின் எதிர்கால அரசியல் இருப்புக்கு உறுதியாக வழிகோலும் நாடுகடந்த தமிழீழ அரசினை பலப்படுத்த வேண்டியது காலத்தின் கடமையென கொண்டு அனைவரையும் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டுக்குழுவினர் அழைப்பு விடுக்கின்றனர்.




0 Responses to சுவிசில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின தேசிய அட்டை வழங்கும் நிகழ்வு!