அரசாங்கத்தினுள் தனக்காகக் குரல் கொடுக்கக் கூடியவர்கள் அமைச்சர்களான மோ்வின் சில்வா மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் தான் என்று பாராட்டியுள்ள மஹிந்த அவர்கள் இருவருடைய குரலைப் பாதுகாக்க தான் எவ்வளவு பணம் செலவழிக்கவும் தயார் என்றும் தெரிவித்துள்ளார்.
அமைச்சர்கள் பலர் முன்னிலையில் மஹிந்த அதனைக் கூறிய போது அமைச்சர் மோ்வின் சில்வாவும் பக்கத்தில் இருந்துள்ளார்.
அந்த வகையில் அமைச்சர் மோ்வின் சில்வா மற்றும் விமல் வீரவன்ச ஆகியோரின் குரல்களைப் பாதுகாக்க அமெரிக்கா மட்டுமன்றி உலகின் எந்த நாட்டுக்கு அனுப்புவதற்கு வந்தாலும் அரசாங்கப் பணத்தில் அவர்களுக்கான சிகிச்சையைப் பெற்றுக் கொடுக்க தான் பின்னிற்கப்போவதில்லை என்றும் மஹிந்த வலியுறுத்தியுள்ளார்.
அமைச்சர் மோ்வின் சில்வாவையும் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லுமாறு ஆலோசனை கூறியுள்ள மஹிந்த, அதற்கான செலவை மஹிந்த நிதியத்திலிருந்து வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.



0 Responses to அடிதடி மோ்வினுக்குத் தொண்டையில் அடைப்பு